full screen background image

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் அறிமுகமாகிறார் மாடலிங் அழகியான தர்ஷா குப்தா

பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’யில்  பிஸியாகவும் நடித்து வருபவர் தர்ஷா குப்தா.

சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் தர்ஷா குப்தாவிற்கு இப்போது திரைப்படத்தில் நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது.

‘பழைய வண்ணாரப்பேட்டை,’ ‘திரெளபதி’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான மோகன்.ஜி. இயக்கவுள்ள அடுத்தப் படமான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில்தான் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார் தர்ஷா குப்தா.

இது பற்றி தர்ஷா குப்தா பேசும்போது, “திரெளபதி என்னும் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த இயக்குநர் மோகன்.ஜி-யின் அடுத்தப்  படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.  

என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட  படைப்பை கொடுத்த, மோகன்.ஜியுடன் என்பதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது.

திரெளபதி’ போலவே இந்த ‘ருத்ர தாண்டவம்’ படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ருத்ர தாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன..” என்கிறார் தர்ஷா குப்தா.

Our Score