full screen background image

லைகா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின்-மஞ்சிமா மோகன் நடிக்கும் புதிய படம்

லைகா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின்-மஞ்சிமா மோகன் நடிக்கும் புதிய படம்

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் புதிய படத்தை தனது 9-வது தயாரிப்பாக தயாரிக்கவுள்ளது.

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் கௌரவ் நாராயணன், இந்த பிரம்மாண்டமான புதிய படத்தை இயக்குகிறார்.

lyca-productions-no-9-8

தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9-வது படம் இது.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகனுடன் மேலும் பல பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

‘சிகரம் தொடு’ படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார்.  ‘டிமான்டி காலனி’யில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

lyca-productions-no-9-1

ஒளிப்பதிவு – அரவிந்த்சிங், இசை – டி.இமான், கலை – விதேஷ், படத் தொகுப்பு – KL. பிரவீன், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K, நிர்வாக தயாரிப்பு – S.பிரேம், தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ், எழுத்து இயக்கம் – கௌரவ் நாராயணன்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது.

Our Score