சமுத்திரக்கனி நடிப்பில் தாமிரா இயக்கும் புதிய படம் ‘ஆண் தேவதை’ 

சமுத்திரக்கனி நடிப்பில் தாமிரா இயக்கும் புதிய படம் ‘ஆண் தேவதை’ 

பெயர் சொன்னாலே போதும்; அவர் ஏற்கிற பாத்திரத்தின் உண்மை தெரியும் என்றே பெயரெடுத்துவிட்டார் நடிகர் சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கவுள்ள புதிய படம் ‘ஆண் தேவதை.’

எப்போதும் பெண்களைத்தானே தேவதை என்பார்கள்.. இதிலென்ன புதிதாக ‘ஆண் தேவதை’  என்று கேட்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப் பொடி வைத்திருக்கிறார்கள். 

இயக்குநர் சிகரம் கே. பால​ச்சந்தரின் மாணவரான தாமிராதான் இந்தப் படத்தை எழுதி, இயக்கப் போகிறவர். இதனாலேயே படத்தின் டைட்டிலேயே ஒரு புதுமை இயல்பாகவே வந்துவிட்டது. தாமிரா ஏற்கெனவே பாலச்சந்தர் – பாரதிராஜா இருவரையும் இணைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தில் நடிக்க வைத்து  இயக்கியவர்.

director-thamira-2

இந்த ‘ஆண் தேவதை’ படத்தில் சமுத்திரக்கனியுடன் ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி, ‘பூ’ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​ ,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – விஜய் மில்டன், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – ஜாக்சன், சண்டை பயிற்சி – ரன் ரவி, காஸ்ட்யூம் டிசைனர் –  கீர்த்தி வாசன் & ஷோபியா சவுரிராஜன், தயாரிப்பு நிர்வாகம் – அண்ணாமலை, பி.ஆர்.ஓ – ஆ. ஜான், தயாரிப்பு – ​சிகரம் சினிமாஸ்​, தயாரிப்பாளர் – ஃபக்ருதீன், எழுத்து, இயக்கம்  – தாமிரா.

‘இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரிடம் கொண்ட அன்பு, மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக ‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ​ஃபக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார் தாமிரா.  இப்படத்தைத் தன் குருநாதருக்கு சமர்ப்பணமாக்கவும் உள்ளார். 

சற்றே இடைவெளிக்குப் பின் வந்தாலும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் இசை, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு, ஜாக்சனின் கலை இயக்கம்  என்று பல முக்கிய திறமைசாலிகளுடன் கை கோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு திரைக்களத்துக்கு திரும்பி வந்திருக்கிறார் இயக்குநர் தாமிரா.

img_9694

படம் பற்றிப் பேசிய இயக்குநர் தாமிரா, “இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.  இன்று உலக மயமாக்கல், நகர மயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. அணியும் சட்டை முதல், பேசும் அலைபேசியின் நெட்ஒர்க்வரை  எதையும் அதுவே முடிவு செய்கிறது.

இப்படிப்பட்ட இன்றைய பரபரப்பான சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.

ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும், தந்தையிடம் வளரும் குழந்தைக்கும்  என்ன வேறுபாடு..? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்து​ச்  செல்கிறது என்பதையும் படம்  உணர வைக்கும். முழுக்க முழுக்க சென்னையில் உருவாகவுள்ள  ‘ஆண் தேவதை’யின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது..” என்றார்.

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score