‘360 டிகிரி’ என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘எதை நோக்கி’.
இதில் நிதின் சாம்சன் ஹீரோவாக அறிமுகமாகிறார். டாமி ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும், லிவிங்ஸ்டன், மனோபாலா, நிக்கோலஸ், சாமிநாதன், காயத்ரி, லாவண்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜி.சதீஷ், இசை, பாடல்கள் – என்.சி.அனில், எழுத்து, இயக்கம் – நிதின் சாம்சன்.
காடு. இயற்கை என வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் காதல், நகைச்சுவை, ஆக்சனும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
காட்டுக்குள் புகைப்படம் எடுக்கச் செல்லும் கதாநாயகனும், சுற்றுலாவுக்காக காட்டுக்குள் வந்து வழி தவறி மாட்டிக் கொள்ளும் ஹீரோயினும் சந்திக்கிறார்கள். நாயகிக்கு, நாயகன் வழி காட்ட அதனாலேயே அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அந்தக் காட்டுப் பகுதியில் சிலரால் நாயகிக்கு தீங்கு நேரிடுகிறது. இதற்கு நாயகனின் எதிர் விளைவு என்ன என்பதுதான் இந்த ‘எதை நோக்கி’ படத்தின் கதையம்சம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதுமலை, மனசக்குடி, கூடலூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
மிக விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடும் நடைபெறவுள்ளது.









