‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘கட்டப்பாவ காணோம்.’
இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், திருமுருகன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இயக்கம் – மணி செய்யோன், இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு –சதீஷ் சூர்யா, ஒளிப்பதிவு – ஆனந்த் ஜீவா, கலை – லட்சுமி தேவ்.
இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இதுவரை நான் நடித்துள்ள சவாலான கதாப்பாத்திரங்கள், எனக்கு நற்பெயரை சம்பாதித்து தந்திருக்கின்றன. ஆனால் என்னுடைய நிஜ வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்த கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் குறைவுதான்.
அந்த வகையில் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படதில் என் கதாப்பாத்திரமானது, என்னுடைய வயதையும், என் அன்றாட வாழ்க்கையையும் ஒட்டியே அமைந்திருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்த படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மீனு’. இன்றய காலக்கட்டத்தில் எப்படி சராசரி மாடர்ன் பெண்கள் இருக்கிறார்களோ, அப்படியே என்னுடைய மீனு கதாப்பாத்திரமும் இருக்கும்.
கிராமத்து பெண் வேடம், சிட்டி பெண் வேடம் என எந்த வித்தியாசமும் எனக்கு கிடையாது. இரண்டுமே சரிசமமாய் என் மனதோடு எப்போதும் ஒட்டி இருக்கும் கதாப்பாத்திரங்கள்தான்…” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.













