full screen background image

மோகன்லால் – கவுதமி நடிக்கும் ‘நமது’ திரைப்படம்

மோகன்லால் – கவுதமி நடிக்கும் ‘நமது’ திரைப்படம்

வாராஹி சலன சித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் மோகன்லாலும், கவுதமியும் இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் என்று மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மனமன்தா’ என்றும் தமிழில் ‘நமது’ என்றும் பெயர் சூட்டி உள்ளார்கள்.

மலையாளத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தின் அமோக வெற்றியின் காரணமாக மோகன்லால் – கவுதமி ஜோடி ராசியானது என்று கேரளாவில் போற்றப்படுவதுண்டு.

இந்தப் படத்தில் விஸ்வநாத்  – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார்.    ஒளிப்பதிவு   –  ராகுல் ஸ்ரீவத்சவ், இசை   –  மகேஷ் சங்கர், தயாரிப்பு   –  ரஜினி கோரப்பட்டி, எழுத்து, இயக்கம் –  சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கி இருப்பவர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

Our Score