மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படம் ‘இணைய தலைமுறை’.
இந்தப் படத்தில் நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் ‘டூரிங் டாக்கீஸ்’, ‘மாதவனும் மலர்கொடியும்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக மனிஷா ஜித் நடிக்கிறார். இவர் ‘கம்பீரம்’ படத்தில் சரத்குமார் மகளாக நடித்தவர். அத்துடன் ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘விந்தை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். மற்றும் ரவி, சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன், ராஜேந்திரநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆரோ, இசை – T.J.கோபிநாத், பாடல்கள் – இளைய கம்பன், பெ.இளந்திருமாறன், கலை – தியாகு, நடனம் – ரமேஷ் கமல், சண்டை பயிற்சி -ஆர்.கே.முரளி, எடிட்டிங் – வில்ஸி, தயாரிப்பு – அம்பிகா முஜீப், கதை, தயாரிப்பு, இணை இயக்கம் – பெ.இளந்திருமாறன், திரைக்கதை, வசனம், இயக்கம் – சு.சி.ஈஸ்வர். இவர் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி பேசிய இயக்குநர் ஈஸ்வர், “கல்லூரி வாழ்க்கை என்பது சுவாரஸ்யமானது. அது மட்டுமல்ல… உல்லாச பறவைகளாக பாடித் திரிந்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்கையில் பேஸ்புக், டிவிட்டர் போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காதல், மோதல், சென்டிமெண்ட், காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம். படப்பிடிப்பு ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது..” என்றார்.









