தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று வில்லிவாக்கத்தில் நடிகர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சம்பந்தப்படுத்தி பேசினார்.
விஜயகாந்த் பேசும்போது, “நான் நடித்த ‘கஜேந்திரா’ படத்துல சில காட்சிகளை கட் செய்யணும்னு சொன்னார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ். ஆனால் நான் செய்யலை. மிரட்டுனாங்க. நான் பயப்படலை.. முடியாதுன்னு தைரியமா சொன்னேன்.
அதே மாதிரி ரஜினி ஸார் நடிச்ச படத்துல சில காட்சிகளை கட் செய்யச் சொன்னாங்க. அவர் அதை செஞ்சுட்டாரு. எதுக்கு வம்புன்னு விட்டுட்டாரு. ரஜினி ஸார் மாதிரி நானும் செஞ்சிருக்கலாம். ஆனால் நான் செய்யலை. எந்த விஷயத்திலும் நான் பின் வாங்கலை.
ரஜினி ஸாரை ஏன் இங்க சொல்றேன்னா அவர் ஒரு நல்ல மனிதர்.. நான் சமீபத்துல அவர்கூட போன்லகூட பேசலை. பேசியிருக்கலாம்.. கூப்பிட்டிருக்கலாம். நாம கூட்டிட்டு வந்திருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அவருக்கு பிரச்சினை வரும்ன்னு நினைக்குறோம். அப்புறம் நம்ம பத்திரிகையாளர்கள் எப்படி அவரை எங்ககிட்டேயிருந்து பிரிக்கிறதுன்னுதான் பார்ப்பாங்க..” என்றார்.