full screen background image

சந்தானத்திற்கு ஜோடியாகும் மாராத்தி நடிகை

சந்தானத்திற்கு ஜோடியாகும் மாராத்தி நடிகை

தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைசாலிகளை தந்து இருக்கிறது. மராத்திய நாடக மேடைகளில் நன்கு பிரபலமான நடிகையான வைபவி ஷண்டிலியா தமிழ்த் திரையுலகில் கால் பதிக்கிறார்.

இவரை அழைத்து வரும் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். தான் நடிக்கும் புதிய படமான சர்வர் சுந்தரத்தில் இந்த அம்மணிதான் ஹீரோயினாம்.

இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநரான பால்கி இயக்குகிறார்.

Vaibhavi Shandilya 2

வைபவியின் வருகை பற்றி பேசிய இயக்குநர் பால்கி, “மராத்தி நடிகையான வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக நாங்கள் கதாநாயகி தேடி அலைந்து திரிந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது; இருக்கிறது என்பதை வைபவி எங்களுக்குக் கிடைத்ததும் நாங்கள் புரிந்து கொண்டோம்.

பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர் வைபவி. அழகும், திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்..” என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Our Score