full screen background image

வாட்ஸ்அப் மூலமாக நடந்த கதைதான் ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படம்..!

வாட்ஸ்அப் மூலமாக நடந்த கதைதான் ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படம்..!

விடிவெள்ளி வென்ச்சர்ஸ் என்கிற புதிய திரைப்பட நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘துப்பார்க்கு துப்பாய.’

இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக மகேந்திரன் ராமன் நடித்துள்ளார். மலேசியாவில் ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள மகேந்திரன் ராமன், மலேசிய தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர்.

முதன் முறையாக தாய்த் தமிழ்நாட்டில் தயாராகும் படத்தில் இவர் அறிமுகமாகிறார். ராப் எனப்படும் ‘ரிதம் அன்ட் போயட்ரி’ வகை பாடல்கள் பாடுவதிலும் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் இவர்.

இவருக்கு ஜோடியாக விஜய் டி.வி.யின் ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற ஆனந்தி நடித்துள்ளார். இவர் அண்மையில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்திருந்தார். மேலும் ரியா. அபரஜித், ஜெய் கணேஷ், மகா தாரா, ராகவன், கிஷோர், தயாளன் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

இசை – டி.கே. இமானுவேல். சோலைராஜா ஒளிப்பதிவு செய்ய, அருண் பிரசாத் படத் தொகுப்பு செய்கிறார். அதிநவீன தொழில் நுட்பத்துடன் வியக்க வைக்கும் க்ராஃபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ள ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தை விடிவெள்ளி வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்காக ஜானகி தருமராசன் தயாரித்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பவர், ராஜராஜன். படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய காலகட்டத்தில் பேய்ப் படங்கள்தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. நட்சத்திர நடிகர் – நடிகையர் பலரும் பேய்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளத்தான் புதிய கோணத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் ‘துப்பார்க்கு துப்பாய’ என்ற இந்த புதிய படமும் நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு சென்னை, வேலூர், ஆந்திரா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இயற்கை அழகு கொஞ்சும் பகுதிகளில் நடந்து நிறைவடைந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஆக்கப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதிரடி திருப்பங்களுடன், இளைஞர்களை கவரும் வகையில் ‘துப்பார்க்கு துப்பாய’ திரைப்படத்தின் காட்சிகள் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். அண்மையில் ‘வாட்ஸ் அப்’ மூலம் இளைஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு ‘துப்பார்க்கு துப்பாய’உருவாகி இருப்பதாகவும் படக் குழுவினர் கூறியுள்ளனர்.

Our Score