full screen background image

கோவையில் ‘அத்துவுட்டா’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு..!

கோவையில் ‘அத்துவுட்டா’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு..!

நடிகர் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘போக்கிரி ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகர்கள் பாபி சிம்ஹா, விமல், சத்யராஜ், ரோபோ சங்கர், முனிஷ்காந்த், நடிகை நந்திதா என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இமானின் இசை கச்சேரியும் நடைபெற்றது. படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘அத்துவுட்டா’ பாடல் ஏற்கனவே பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த பாடலை இமான் மேடையில் பாடும்போது விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்களை மேடைக்கு அழைத்து ஆட வைத்தார்.

pokkiriraja audio launch (8)

‘அத்துவுட்டா’ பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலர் இந்த பாடலுக்கு எழுந்து நின்று ஆடினார்கள்.

pokkiriraja audio launch (37)

காதலர் தினமான நேற்று விழாவை சிறப்பிக்கும் வகையில் விழாவிற்கு வந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் மாலை மாற்றி காதலர் தினத்தை மேடையிலேயே கொண்டாடினர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து இது மாதிரியான இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மேடையில் பேசிய பலரும் இசையமைப்பாளர் இமானிடம் கேட்டுக் கொண்டனர்.

Our Score