மாதவன் – ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘இறுதிச்சுற்று’.
இப்படத்தை சுதா கங்கோரா பிரசாத் இயக்கியிருக்கிறார். தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகி வெளிவந்துள்ளது.
முழுக்க முழுக்க குத்துச் சண்டையை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ள இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரான ‘மைக் டைசன்’ இறுதிச்சுற்று படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில், தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்திருக்கும் ‘இறுதிச் சுற்று’ படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து, “இந்த பாக்சிங் படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மைக் டைசனையே ஈர்க்கும் அளவுக்கு ‘இறுதிச் சுற்று’ படம் அமைந்ததில் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் மைக் டைசன், குத்துச் சண்டை போட்டி பற்றி தெரிவித்திருந்த பலவித கருத்துக்கள் வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.










