நடிகை த்ரிஷா இப்போது புலிப் பாய்ச்சல் காட்டி வருகிறார். தன்னுடைய திருமணம் நின்று போனதை பற்றி அவரைத் தவிர மற்றவர்களெல்லாம் எத்தனை கவலையுடன் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலையேபடாமல் படங்களை மளமளவென்று ஒத்துக் கொண்டு வருகிறார்.
வரவிருக்கும் ‘தூங்காவனம்’, மற்றும் ‘அரண்மனை பாகம்-2’ ஆகிய படங்களில் எது இரண்டாவதாக வருகிறதோ அதுவே த்ரிஷாவின் 50-வது படமாகும். அதற்குள்ளாக தனது 51-வது படத்தையும் தேர்வு செய்துவிட்டார் த்ரிஷா.
கிரிதர் தயாரிப்பு நிறுவனம் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் ‘நாயகி’ என்கிற படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். மேலும் ‘சத்யம்’ ராஜேஷ், ஜெயபிரகாஷ், பிரம்மானந்தம், ஜி.வி., மனோபாலா, சென்ட்ராயன், கோவை சரளா, மதுலதா ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெகதீஷ், இசை – ரகு குன்ச்சே, கலை இயக்கம் – கே.வி.ரமணா, எடிட்டிங் – கெளதம் ராஜு, நடனம் – ஸ்வர்ணா, சண்டை பயிற்சி – வெங்கட், உடைகள் – சூரி, மேக்கப் – ரங்கா, மக்கள் தொடர்பு – நிகில், இணை தயாரிப்பாளர் – கே.ராம்பாபு, தயாரிப்பு – எம்.கிரிதர், எம்.பத்மஜா, எழுத்து-இயக்கம் – கோவி.
இது நாயகிக்கு ஸ்கோப் உள்ள கதையாம். த்ரிஷா கதையைக் கேட்டவுடன் மறுபேச்சில்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டதாக பெருமையுடன் கூறுகிறார் இயக்குநர் கோவி.









