ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் புதிய படம் ‘தனி ஒருவன்’.
இதில் ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். அரவிந்த்சாமி இதுவரை நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தம்பி ராமைய்யா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘ஜெயம்’, ‘சந்தோஷ் சுப்புரமணியம்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜாதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வெற்றி கூட்டணியான ‘ஜெயம்’ ராஜா – ‘ஜெயம்’ ரவி இணையும் ஆறாவது படம் இது. ‘ஜெயம்’ ராஜா இந்தப் படத்தில் இருந்து என்று தன் பெயரை ‘மோகன் ராஜா’ என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய இசையில் புதிய பரிமாணத்தை அளிக்கும் ‘ஹிப் ஹாப் தமிழா’ புகழ் ஆதி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பொதுவாக துள்ளல் இசைக்கு மட்டும் பயன்படுத்தபட்ட ராப் இசையை, நல்ல கருத்துக்கள் கொண்ட வரிகளுக்கு உணர்ச்சிகளை உத்வேகப்படுத்தும் வகையில் கையாண்டுள்ளார். இசைப் பிரியர்களுக்கு இதுவொரு புதிய அனுபவமாக இருக்கும்.
இப்படத்தின் இன்னொரு தனியம்சம் என்னவெனில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராம்ஜி, படத்தின் கதையைக் கேட்டவுடன், இப்படத்தை ஃபிலிம் தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூற ஃபிலிம் தொழில் நுட்பத்திலேயே படமாக்கப்பட்டுள்ளது. படத் தொகுப்பை கோபி கிருஷ்ணாவும், கலை இயக்கத்தை வி.செல்வகுமாரும் மேற்கொண்டுள்ளனர்.
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த ‘தனி ஒருவன்’ திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட சார்பாக கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
டேராடூன், முசெளரி, கோவா, பேங்காக் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமான கோணத்தில் புதுவிதமான திருப்பங்களை கொண்ட திரைக்கதை அம்சத்துடன் தயாராகியுள்ளது ‘தனி ஒருவன்’.
வெகு சிறப்பாக வந்திருக்கும் ‘தனி ஒருவன்’ படத்தின் இசை, இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதியடைய செய்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் இயக்குனர் மோகன் ராஜா.
இப்படத்தின் இசையை ஜுலை 15-ம் தேதியும், படத்தினை ஆகஸ்ட் மாதமும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, இயக்கம் – மோகன் ராஜா
வசனம் – சுபா மற்றும் மோகன் ராஜா
இசை – ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஒளிப்பதிவு – ராம்ஜி
படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா
கலை – வி. செல்வகுமார்
நடனம் – பிருந்தா
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா மற்றும் திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – S மாரியப்பன்
நிர்வாக தயாரிப்பு – SM வெங்கட் மாணிக்கம்
தயாரிப்பு – கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ்









