full screen background image

“ஆன்லைன் மீடியா பொறுப்பேயில்லாமல் எழுதினார்கள்…” – கோபப்படும் நடிகை வசுந்த்ரா

“ஆன்லைன் மீடியா பொறுப்பேயில்லாமல் எழுதினார்கள்…” – கோபப்படும் நடிகை வசுந்த்ரா

‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘பேராண்மை’ படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை வசுந்த்ரா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக அவரது அந்தரங்க  செல்ஃபிக்கள் இணையத்தில் பரவலாக்கப்பட்டதிலிருந்து அதிர்ச்சியாகி அமைதியாக இருந்தார். திரையுலக விழாக்கள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த வாரத்திய ‘ஆனந்தவிகடனு’க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அந்த புகைப்படங்களெல்லாம் தன்னுடையதுதான் என்று மறைமுகமாக ஒத்துக் கொண்டாலும் இந்த விஷயத்தில் ஆன்லைன் மீடியாக்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், ”எனக்கு மட்டும் இல்லை.. உலகத்துல எத்தனையோ பேருக்கு இப்படி நடந்திருக்கு. நம்ம நாட்டுல மட்டும் ஏன் இதை இப்படி வெறி பிடிச்சு ஷேர் பண்றாங்கனு தெரியலை. ஒரு வாரத்துல அவங்களுக்கு வேற விஷயம் கிடைச்சிருச்சு. அங்கே போயிட்டாங்க.

ஆனா, அந்த அஞ்சு மாசமும் நான் செல்போனை ஆஃப் பண்ணிட்டு வீட்டைவிட்டு வெளியவே வரலை. நான் செஞ்ச தப்பு என்ன..? என்னால இந்தச் சமூகத்துக்கு என்ன பிரச்னை..? இங்கே 50 சதவிகிதம் ஆண்களும் 50 சதவிகிதம் பெண்களும் இருக்காங்க. எல்லா ஆண்களுக்கும் அம்மா, அக்கா, மகள்னு ஏதோ ஒரு பெண் உறவு நிச்சயமா இருப்பாங்க. என் போட்டோவை ஷேர் பண்றவங்க, அதை நினைச்சுப் பார்க்கணும்.

பெண்களை, ஆண்கள்தான் பத்திரமாப் பாத்துக்கணும். இவங்களே இப்படிப் பண்ணா எப்படி..? ஒரு சமூகமே பெண்களைக் காயப்படுத்தினா அது சரியா? நாம கும்பிடுற சாமியிலயே சரஸ்வதி, லட்சுமினு எத்தனையோ பெண் தெய்வங்கள் இருக்கு. ஆனா, பெண்களை நாம மதிக்கிறதே இல்லை.

நான் அந்த சமயத்துல போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன். ஆனா, என் மேல அக்கறையா நிறையப் பேர் விசாரிச்சு, ‘என்ன ஹெல்ப் வேணும்?’னு கேட்டாங்களாம். அதே மாதிரி பிரின்ட் மீடியாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். ஆன்லைன் மீடியா மொத்தமும் பொறுப்பே இல்லாம சென்சேஷனுக்காக எழுதினாங்க. நான் இந்தி பொண்ணு இல்லைங்க… இங்க பிரச்னைன்னா, எல்லாத்தையும் விட்டுட்டு அங்கே போறதுக்கு. நம்ம ஊர் பொண்ணு. இங்கேதான் இருப்பேன்.”  என்று சொல்லியிருக்கிறார்.

வசுந்த்ரா இப்போது ‘மைக்கேல் ஆகிய நான்’, மற்றும் ‘இயேசு புத்தன் காந்தி’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம்..!

Our Score