full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்க மாட்டேன்” – நடிகர் விஷால் உறுதி..!

நடிகர் சங்கத் தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்க மாட்டேன்” – நடிகர் விஷால் உறுதி..!

“நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் தேர்தல் போட்டியிலிருந்து பின் வாங்க மாட்டேன்…” என்று விஷால் உறுதியுடன் கூறியுள்ளார்.

DSC07649

நடிகர் விஷால் நற்பணி இயக்கம் சார்பில் நேற்று 10 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.  இந்த விழாவில் பேசும்போது நடிகர் விஷால் இதனைத் தெரிவித்தார்.

திருமண நிகழ்ச்சிக்கு பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் விஷால்.

DSC07668

அப்போது, “சினிமா துறை மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகிறோம். பதவியில் இருந்து கொண்டுதான் நல்லது செய்ய வேண்டும் என்பது அல்ல. சினிமா துறை எனது தாய் மாதிரி. எனக்கு சோறு போடும் தெய்வம்.

நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு தெரியும். எனக்கு கேள்வி கேட்க தோன்றியதால் கேள்வி கேட்டேன். இந்த தேர்தலில் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பின் வாங்காமல் அதனை சந்திப்பேன். தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சரத்குமாரும், ராதாரவியும் அரசியலில் இருக்கிறார்கள். எனவே அவர்கள், நடிகர் சங்கத்தில் அரசியல் நுழைந்துவிட்டது என்று சொல்லக் கூடாது.

விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியதும் நடிகர் சங்க தலைவர் பதவியை விட்டு விலகினார். இதனை சரத்குமார் தானாக புரிந்து கொண்டால் சரி. அவர் பதவியில் இருந்து இறங்க வேண்டும் என்று நாங்களாக கூற மாட்டோம். அதற்காகத்தான் இப்போது தேர்தல் வந்துள்ளது.

நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். நாடக நடிகர்களும் அதில் இருக்கிறார்கள். எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என துல்லியமாக கூற முடியாது. நாங்கள் கேட்பது வெறும் கட்டிடம்தான். எனவே இதில் அரசு தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. சங்கத்திற்குள்ளேயே பேசி தீர்க்கவேண்டிய பிரச்சினைதான். 

நாடக நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என ராதாரவி குற்றம் சாட்டி இருக்கிறார். எங்கள் அணியில் மூத்த நாடக நடிகர் ஒருவரை துணை தலைவர் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர் பதவிகளில் 9 நாடக நடிகர்களையும் நிறுத்த இருக்கிறோம். அவர்களும் அதே மாதிரி செய்வார்களா என கேட்க விரும்புகிறேன். நாடக நடிகர்கள் எப்போதும் எங்களுடன் சேர்ந்தே இருப்பார்கள். இளைய தலைமுறை நடிகர்களாகிய நாங்கள் அவர்களை பார்த்துத்தான் நிறைய கற்று இருக்கிறோம். எனவே தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டோம்..” என்றார் விஷால்.

Our Score