கந்தர்வா செல்லுலாய்ட் கிரியேட்டர்ஸ் உடன் ராஜ் அஸோஸியேட்ஸ், கதிர் பிலிம்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய தமிழ் திரைப்படம் ‘ஒரு தோழன் ஒரு தோழி’.
இப்படத்தின் கதை நாயகர்களாக மீனோஷ் கிருஷ்ணா, மனோதீபன் மற்றும் கதாநாயகியாக அஸ்தரா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
இவர்களோடு அபிநிதா, ‘ஹலோ’ கந்தசாமி, குமார், மகாதாரா, அருணாச்சல மூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையில் படத்தின் ஏழு பாடல்களும் இதயத்தில் நட்பு பாராட்டுகின்றன.
“நல்ல தோழன் தந்தைக்கு சமமாகிறான்..
நல்ல தோழி தாய்க்கு சமமாகிறாள்..”
என்ற அழகிய கருத்தினை கொண்டு, எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பஞ்சாலையில் வேலை பார்க்கும் இரு நண்பர்களின் வாழ்க்கைக்குள் ஒரு பெண் வருகிறாள். நட்பு, காதல், சண்டை எனப் போகும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு உயர்வான நிலையை அடையும் சூழ்நிலை வருகிறது. அப்போது ஏற்படும் ஒரு அசம்பாவிதம் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போடுகிறது எனபதனை ‘நட்பு என்றும் சொர்க்கத்தில் வாழாத மனிதர்களே இல்லை’ என்ற உயர்ந்த உணர்வோடும் சொல்லும் கதை இது.
இப்படத்தின் படப்பிடிப்பு இராஜபாளையம், மதுரை யானைமலை ஒத்தகடை, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டது.
இத்திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.
தொழில் நுட்ப கலைஞர்கள்
எழுத்து, இயக்கம் – பெ.மோகன் D.F.Tech
ஒளிப்பதிவு – ஷிவன் குமார் D.F.Tech
இசை – ஜெய்கிருஷ்
எடிட்டிங் – கிருத்திகா D.F.Tech
பாடல்கள் – மோகன்ராஜ், பெ.மோகன், மகாதாரா
புகைப்படம் – இளங்கோ
தயாரிப்பு நிர்வாகம் – மகாதாரா
மக்கள் தொடர்பு – V.P.மணி, செல்வரகு
இணை தயாரிப்பு – கோவை உதயன்
தயாரிப்பாளர்கள் – கிருத்திகா.G, Er.D.ராஜேஷ், பால் டிப்போ K.கதிரேசன்









