2012-ம் வருடம் வெளியான ‘வாச்சாத்தி’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் R.ரமேஷ், தற்போது மீண்டும் “இலக்கணம் இல்லா காதல்” எனும் புதிய படத்தை தயாரித்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
இவருடன் கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, V.C. ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார் P.S. உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : தீபக் – மணி
ஒப்பனை : நாகேந்திரன்
உடைகள் : AVM பாலு
சண்டை : திரில்லர் முகெஷ் , ஜாக்குவார் தங்கம்
எடிட்டிங். : அகமது ( ஆதிபகவன் )
கலை : ரவீந்திரன் BFA
பாடல்கள் இசை : வில்லியம்ஸ் – நாகா
பின்னணி இசை : அம்சத்வனி
பாடல்கள் : கவிஞர் பிறைசூடன்
ஒலிப்பதிவு : சிங்கராஜ்.
மக்கள் தொடர்பு : M.P. ஆனந்த்
தயாரிப்பு : ரெத்னா ரமேஷ்
கதை, திரைக்கதை வசனம், இயக்கம் : V. C. ஜெயமணி
“வாச்சத்தி’ படம் போலவே இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும்..” என இயக்குநர் V.C.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்தார்.
படத்தில் ஹீரோவின் பெயர் இளவரசன் என்றும், ஹீரோயினின் பெயர் திவ்யா என்றும் இருப்பதால், “இந்தப் படம் தர்மபுரியில் நடந்த காதல் கவுரவக் கொலையைப் பற்றிய படமா..?” என்று கேட்டதற்கு “படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..” என்றார்.
இதுலயுமா சஸ்பென்ஸ்..?









