நண்பன் மட்டுமே உயிர் கொடுக்க முன் வருவான் – ‘நண்பர்கள் நற்பணி மன்ற’த்தின் கதை இதுதான்..!

நண்பன் மட்டுமே உயிர் கொடுக்க முன் வருவான் – ‘நண்பர்கள் நற்பணி மன்ற’த்தின் கதை இதுதான்..!

ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சரர்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்.’

இந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்சயா நடிக்கிறார். மற்றும் அன்பாலயா பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம்புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரவி மரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் சுரேஷ், சார்மிளா, ராதா, ஜார்ஜ் மரியான் என்று பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   செல்வா.ஆர்.எஸ்

இசை    –    ஸ்ரீகாந்த்தேவா

பாடல்கள்   –    நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி, கவிபாஸ்கர்.

கலை  –  பத்மநாப கதிர் 

எடிட்டிங்   –  லான்சி மோகன்

நடனம்  –  சஞ்சீவ் கண்ணா               

ஸ்டண்ட்  –  மிரட்டல் செல்வா

தயாரிப்பு நிர்வாகம் – ரஞ்சித், பழனியப்பன்                                

நிர்வாக தயாரிப்பு    –   கமரன்

தயாரிப்பு  – C.மாதையன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி. இவர் ஏற்கெனவே வைகாசி பொறந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு ஆகிய படங்களை இயக்கியவர். நடிகர்கள் பிரசாந்த், சரவணன் ஆகியோரை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்.

படம் பற்றி இயக்குனர் ராதாபாரதி பேசியபோது, “நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். சமீபத்தில் இந்த படத்திற்காக நட்பை மையப்படுத்தி

‘அண்ணன் தம்பிய கூப்பிட்டுப் பாரு

அக்காவையும் கூப்பிட்டுப் பாரு

மாமன் மச்சான கூப்பிட்டுப் பாரு

மாப்பிளையையும் கூப்பிட்டுப் பாரு

சொந்த பந்தத்தையும் கூப்பிட்டுப் பாரு

உதவின்னு கேட்டுப் பாரு

யாரு வருவாங்கன்னு கேட்டுப் பாரு?

நண்பன கூப்பிட்டு பாரு..!    

உயிரையே கொடுப்பான் பாரு..’ என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது..” என்றார் ராதாபாரதி.

Our Score