‘ராஜாராணி’ படத்தின் இயக்குநரான அட்லிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார் அட்லி.

மணமகள் பிரியா ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறாராம். கடைசியாக ‘சிங்கம்-2’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்தவராம்.
இவர்கள் இருவரின் திருமண நிச்சயத்தார்த்தம் இன்று நண்பர்கள், உறவினர்கள் சுற்றம் சூழ நடைபெற்றது. ஆர்யாவும், நயன்தாராவும் ஜோடியாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

திருமணம் வரும் நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை ஓடம் நீண்ட நாள் ஓடும் மருந்தாக ‘ராஜாராணி’ படத்தை எடுத்தவருக்கு அவருடைய வாழ்க்கையை ஓட்டவும் தெரியும்..
மணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!









