full screen background image

ஈரோஸ் நிறுவனத்தில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியில் சேர்ந்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்

ஈரோஸ் நிறுவனத்தில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியில் சேர்ந்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்

‘கோச்சடையான்’ படத்தைத் தயாரித்த ஈரோஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான Eros Now  நிறுவனத்தின் தென்னிந்திய அலுவலகத்தில் கிரியேட்டிவ் இயக்குநராக செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று பொறுப்பேற்றுள்ளார். மேலும் Eros Now  நிறுவனத்தின் டிஜிட்டல் தொடர்பான பணிகள் அமைப்பிற்கும் தலைவராக செளந்தர்யா பணியாற்றுவார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட்  திரைப்பட பொழுது போக்குத் துறையில் ஒரு முக்கிய உலகளாவிய நிறுவனமாக விளங்கி வருகிறது. சினிமா, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் என அனைத்து வடிவங்களிலும் உலகம் முழுவதும் இந்திய படங்களை விநியோகம் செய்து வருகிறது ஈரோஸ்.

நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய ஊடக நிறுவனம் ஈரோஸ் நிறுவனம்தான். ஈரோஸ் சர்வதேச அரங்கில் இந்திய சினிமாவை நிலை நிறுத்துவதில் மூன்று தலைமுறைகளாக அனுபவம் வாய்ந்தது.

இந்த நிறுவனம் தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல பிராந்திய மொழி திரைப்படங்களில் மொத்தம் 1,100-க்கும் மேற்பட்டவைகளுக்கான உரிமத்தை கையில் வைத்துள்ளது.  ஈரோஸ் இன்டர்நேஷனல் புதிய, புதிய படங்கள் வெளியிடுவதன் மூலம் ஒரு மாபெரும் சினிமா நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாது உண்மை.

இதனுடைய சார்பு நிறுவனமான Eros Now இணையத்துடன் இணைக்கப்பட்ட சினிமா சங்கிலி தொடர்புகள் வழங்கும் சேவையை வழங்கி வருகிறது. தற்போது ஈரோஸ் வெளியிடும் திரைப்படங்கள் மற்றும் அதே போல் மற்ற பெரிய பாலிவுட் ஸ்டூடியோக்கள், முக்கிய டிவி ஸ்டுடியோக்களில் நடத்தப்படும் இசை வீடியோக்கள் மற்றும் ஆடியோ நிகழ்ச்சிகள் என்று ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. இத்தளத்தில் விளம்பரங்கள் இல்லாமல் வெளியாகும் திரைப்படங்கள் நிகழ்ச்சிகளுக்கு உலகம் முழுவதும் ஏக வரவேற்பு..  இதில் மாத சந்தா கட்டணம் மூலம் உறுப்பினராகி நிகழ்ச்சிகளை. திரைப்படங்களை பார்க்கவும், பதிவிறக்கவும் செய்ய முடியும்.

“தொழில் நுட்பத்தில் தினம் தினம் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுடன் ஈரோஸ் நெள நிறுவனம் தனது டிஜிட்டல் செயலாக்கத்தை புதிய பாதையில் செயல்படுத்த வேண்டி செளந்தர்யா ரஜினிகாந்தின் சேவை இந்நிறுவனத்திற்கு பெரிதும் தேவைப்பட்டது. அதனால்தான் அவரை எங்களது நிறுவனத்தில் இணைத்துக் கொண்டோம்..” என்கிறது ஈரோஸ்.

ஈரோஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் குரூப் சிஇஓ-வான ஜோதி தேஷ்பாண்டே சவுந்தர்யா ரஜினிகாந்தின் வருகை குறித்து கூறுகையில், “சவுந்தர்யாவை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது ஈரோஸ். மொபைல் போன் டெக்னாலஜி, டிடிஹெச், IPTV, Broadband உட்பட பல தளங்களில் டிஜிட்டல் சேவைகள் தற்போது அதிகமாகி வரும் வேளையில் செளந்தர்யா மாதிரியான அனுபவசாலிகள் இருந்தால் இந்நிறுவனத்தின் செயலாக்கத் திறன் அதிகரிக்கும் என்றே தாங்கள் நம்புவதாக” கூறுகிறார்.

இந்த நியமனம் பற்றி செளந்தர்யா பேசுகையில், “நான் ஈரோஸ் நிறுவனத்தில் ஈடுபட  டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எனது படைப்பாற்றலும், எனது தலைமையும் ஒரு பகுதியாக இருக்கப் போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. ஈரோஸ் நிறுவனம் எதிர்காலத்தில் தரமான ஒரு பெரிய நூலகம் போலாக்கி அதனை டிஜிட்டலில் அனைவரின் பயன்பாட்டுக்கும் கொண்டு வருவோம். தொழில் நுட்பம் மற்றும் படைப்பாற்றலில் எனது அனுபவத்தை முன்னிறுத்தி ஈரோஸ் நிறுவனம் வளம் பெற உதவுவேன். என்னுடைய திரைக்கதை அனுபவத்தை வைத்துக் கொண்டு ஈரோயின் திரைப்பட தயாரிப்பில் என்னுடயை பங்களிப்பை நிச்சயம் திறம்பட மேற்கொள்வேன்..” என்று கூறியிருக்கிறார்.

Our Score