Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் ‘With Love’ – ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் – மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘With Love’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும், கே. சுரேஷ்குமார் எடிட்டிங்கும், ராஜ்கமல் கலை அமைப்பும், ப்ரியா ரவி உடை வடிவமைப்பும் மேற்கொண்டு வருகிறார்கள்.
நவீன இளைஞர்களை கவரும் புதுமையான காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, தற்போதைய தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் ‘With Love’ என்ற தலைப்பு மிகச் செம்மையாகப் பொருந்தியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி தற்போது இணையம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளுடன் தொடர்ச்சியான வெற்றி படங்களை வழங்கிவரும் MRP Entertainment நிறுவனம் ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார்.









