டாக்டர் எல்.சிவபாலனின் ஜீரோ ரூல்ஸ் என்டர்டைன்மென்ட்(பி) லிட் வழங்க மகாலட்சுமி மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானவராயன் வல்லவராயன்’
இதில் கிருஷ்ணாவும், மா.கா.பா.ஆனந்த்தும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம், சௌகார் ஜானகி, கோவை சரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, எஸ்.பி.பி.சரண், மீரா கிருஷ்ணன், பாவா லட்சுமணன், பிரியா, கிருஷ்ணமூர்த்தி, ஷண்முகசுந்தரம், கொட்டாச்சி, சி.ரங்கநாதன், லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பழனிகுமார்
இசை – யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் – சினேகன்
நடனம் – தினேஷ். ராபர்ட்
எடிட்டிங் – கிஷோர்
கலை – ரெமியன்
ஸ்டண்ட் – ரமேஷ்
தயாரிப்பு – கே.எஸ்.மதுபாலா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜமோகன்
படம் பற்றி இயக்குனர் ராஜமோகனிடம் கேட்டோம்……
“இது நம்ம வீட்டில் நடந்த கதை! நடக்கும் கதை! நமக்கு அடுத்த வீட்டில் நடந்து கொண்டிருக்கும் கதை! ஒரே தட்டில் சாப்பிடிகிற அண்ணன் தம்பிகளை பார்த்திருப்போம். அதே தட்டுகாக அவர்களே அடித்து கொள்வதையும் பார்த்திருப்போம். அது மாதிரிதான் இந்த அண்ணன் தம்பிகளும்.
பாசத்தில் எப்படியோ ஈகோவிலும் அப்படியே…! அண்ணன் தம்பி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பெருமையாக பேசியவர்கள் வாய் மூடுவதற்குள், அவர்களின் அடிதடியை பார்த்து ‘அடப்பாவிகளா’ என்று திட்டுவதும் வாடிக்கை!
14 முறை தோற்ற கஜினி முகமதுவையும் மிஞ்சி 30 முறை காதலில் தோற்ற வானவயாரன்(கிருஷ்ணா), யாருமே என்னை காதலிக்கவில்லையே என்று ஏங்கும் வல்லவராயன்.. (மா.கா.பா.ஆனந்த்) மோனல் காஜாரின் காதல், வயதான சௌகார் ஜானகியின் அலுச்சாட்டியம் என காமெடி கலாட்டாதான் இந்த படம். இந்த படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் அவர்கள் உடனே படத்தை வாங்கி விரைவில் வெளியிடுகிறார்…” என்றார் இயக்குனர் ராஜமோகன்.









