காயன்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி, வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு ‘அவன் அவள்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கணபதி, ஸ்வப்னம், சச்சு, பாவா லட்சுமணன் செவ்வாளை, ஆதிசிவன் சுப்புராஜ், சின்ராசு, மணிகுட்டி, என்.சி.பி.விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரவி சீனிவாசன்
இசை – கார்த்திக் ராஜா
பாடல்கள் – சினேகன், பா.விஜய்
கலை – ஆரோக்கியராஜ்
நடனம் – கூல் ஜெயந்த், கருணாகரன்
ஸ்டண்ட் – தவசிராஜ்
எடிட்டிங் – பேட்ரிக்
இணை தயாரிப்பு – சுதா விஸ்வநாதன்.
தயாரிப்பு – காயன்ஸ் பிக்சர்ஸ் வி. உமாமகேஸ்வரி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கிரீஷ் மிரினாளி.
படம் பற்றி இயக்குனர் ராம்கிரீஷ் மிரினாளியிடம் கேட்டோம்….
“குற்றம் ஒன்றை செய்துவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகிறார் ஹீரோ. காட்டில் பெரிய பங்களா ஒன்றில் உள்ள ஒரு பெண் ஒருவருடன் ஹீரோவுக்கு பழக்கமாகிகிறது. அந்த பழக்கம் காதலாக மாறி திருமணமும் செய்து கொள்கிறார். இருவருக்கும் உடல் ரீதியான நெருக்கமும் உண்டாகிறது. அதற்கு பிறகு அந்தப் பெண் திடீரென்று காணாமல் போகிறாள். யார் அவள் என்ற திகில் கேள்விக்கு விடைதான் ‘அவன் அவள்’ திரைக்கதை. பயங்கர திகில் கதையாக அவன் அவள் உருவாகியுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. நடிகர் விக்னேஷுக்கு இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்…” என்றார் இயக்குனர் ராம்கிரிஷ் மிரினாளி.