full screen background image

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த weekend-ஐ இன்னும் ஸ்பெஷலான மாற்ற இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியிருக்கிறது.

ஒருபக்கம், இசை ரசிகர்களின் மனசுல தனக்கென ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற ‘சரிகமப’-வோட புதிய சீசன்.

இன்னொரு பக்கம், Mass-க்கும் Class-க்கும் இடையே நடக்கப் போகும் செம கலகலப்பான போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கிற ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,

‘சரிகமப’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா,

மேலும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

10 சீசன்களை கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ‘சரிகமப’!

வெறும் ஒரு singing reality show-வாக இல்லாமல், பல திறமையான பாடகர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய இசைப் பயணத்துக்கு ஒரு நல்ல platform-ஆக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.

சமீபத்தில் ‘சரிகமப’ 500 எபிசோட்களை கடந்ததை முன்னிட்டு, கோவையில் பிரம்மாண்டமான வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்றது.

ஒவ்வொரு சீசனிலும் புதுசு புதுசான குரல்கள், அசத்தலான performances மற்றும் மனதைத் தொடும் பல தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் ‘சரிகமப’, இந்த புதிய சீசனிலும் இன்னும் பல திறமையான போட்டியாளர்களுடன் இசை விருந்தை கொடுக்க தயாராக இருக்கிறது.

இந்த புதிய சீசனில், இசை உலகின் அனுபவமிக்க மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனாவும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு குரலுக்கும் ஒரு தனி அழகு உண்டு… ஒவ்வொரு performance-க்கும் ஒரு தனி எமோஷன் உண்டு… அந்த வகையில் இந்த புதிய சீசன் ரசிகர்களுக்கு ஒரு அழகான இசை அனுபவமாக இருக்கப் போகிறது.

மாஸ்-க்கும் கிளாஸ்-க்கும் நடக்கப் போகும் செம போட்டி!

இசையிலிருந்து அப்படியே ஒரு energetic zone-க்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும் புதிய showதான் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’.

ஒரு பக்கம் மாஸ் பசங்க… இன்னொரு பக்கம் கிளாஸ் பொண்ணுங்க…

இரண்டு அணிகளிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த celebrity contestants பங்கேற்கிறார்கள்.

ஒவ்வொருத்தரும் தங்களோட style, attitude, personality, talent என தங்களுக்கே உரிய விதத்தில் இந்த போட்டியில் களமிறங்கப் போறாங்க.

இந்த நிகழ்ச்சியை கிகி விஜய் மற்றும் அசார் இருவரும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.

இருவருடைய கலகலப்பான hosting-ம், போட்டியாளர்களுடன் அவர்கள் உருவாக்கும் fun moments-ம் நிகழ்ச்சிக்கு இன்னும் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கப்போகிறது.

இது வெறும் போட்டி மட்டும் கிடையாது. Competition-க்கு நடுவுல fun இருக்கும், friendship இருக்கும், challenges இருக்கும்.

அதோடு யாருமே எதிர்பார்க்காத பல unexpected moments-ம் இந்த show-ல நடக்கப்போகுது. two expreme எனெர்ஜிஸ் இந்த நிகழ்ச்சியில் மோதிக்கொள்ள போறாங்க.

Srinivas – Judge, Sa Re Ga Ma Pa

பத்து வருஷமா இந்த ஷோல ஒரு பகுதியா இருக்கேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமானியர்களை சாதனையாளராக மாற்றும் மேடைதான் இந்த ‘ சரிகமப.’

கிராமங்களில் இருந்து வர்றவங்க ஜெயிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். எத்தனையோ ஷோவில் நடுவராக இருந்திருக்கேன். ஆனால் இப்படி ஒரு பிரம்மாண்டத்தை பார்த்ததில்லை அந்த அளவுக்கு இந்த சீசன் மிகப் பிரமாண்டமாக இருக்கு என்றார்.

Vijay Prakash – Judge :

“பல வருடங்களுக்கு முன்னாடி இதே சரிகமப show-ல் ஒரு contestant-ஆக வந்த நான், இன்று நடுவராக இந்த show-ன் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.

மேலும் “இந்த show நிறைய பேருக்கு ஒரு career-ஐயும், ஒரு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறது. இங்கிருந்து வந்த contestants இன்று உலகம் முழுவதும் perform பண்ணிட்டு இருக்காங்க. அதுதான் Sa Re Ga Ma Pa-வோட reach.

இந்த season-ன் stage, visuals, production எல்லாமே மிகப் பெரிய scale-ல இருக்கு. எப்போதும் show-வோட soul மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பது தான் இதன் சிறப்பு.” என்றார்.

Shwetha Mohan – Judge, Saregamapa:

“இந்த season-ல் முதல்முறையாக ஒரு 360-degree set-ல் Sa Re Ga Ma Pa-வை பார்க்கப்போறோம். எங்க திரும்பினாலும் music-ஐ feel பண்ணக்கூடிய அளவுக்கு set ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு.

எனக்கு Sa Re Ga Ma Pa குடும்பம் ஒரு கூட்டில் வாழும் கிளிகள் மாதிரிதான். Contestants-க்கு நாங்க நடுவர்களாக மட்டும் இல்லாமல், mentors, friends, guides-ஆவும் இருக்கிறோம்.

மக்கள் இந்த show-க்கும், contestants-க்கும் கொடுக்கிற அன்பு எங்களுக்கு மிகப் பெரிய பலம்” என்றார்.

சரிகமப நிகழ்ச்சி குறித்து நடுவர்கள் பேசி முடித்ததை தொடர்ந்து மாஸ் பசங்க vs கிளாஸ் பொண்ணுங்க நிகழ்ச்சி குறித்து பேச தொடங்கினர்.

நிகழ்ச்சி குறித்து ஆர்யா பேசும்போது,

“இது 100 percent out-and-out fun and entertainment guaranteed show.

ரொம்ப interesting-ஆன lineup-ல male and female celebrity contestants இருக்காங்க. மாஸ் பசங்கவும் கிளாஸ் பொண்ணுங்கவும் அவங்களோட style, attitude, emotions, talent-னு எல்லாத்தையுமே express பண்ணப் போறாங்க.

இது வெறும் competition மட்டும் கிடையாது. Fun, friendship, ஜாலியான moments-னு நிறைய விஷயங்கள் இந்த show-ல இருக்கும்” என்றார்.

நிகழ்ச்சி குறித்து ரெஜினா கசாண்ட்ரா பேசும்போது,

“ஆர்யா சொன்ன மாதிரி, எனக்கும் இந்த title கேட்டபோதே ஒரு curiosity இருந்துச்சு. கூடவே ஒரு doubt-ம் இருந்துச்சு.

இந்த show-க்கு ஏன் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’னு title வச்சாங்க? ஏன் ‘கிளாஸ் பொண்ணுங்க Vs மாஸ் பசங்க’னு வைக்கலாமே?

ஆர்யாதான் இப்படித் title வைக்க சொல்லியிருப்பாரோன்னு ஒரே சந்தேகம் இருக்கு!”

என சிரித்தபடி குறிப்பிட்டார்.

“ZEE தமிழ்ல இப்படியொரு fresh concept-ல ஒரு show வர்றதுல எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.

‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – competition எப்படி இருந்தாலும், entertainment-க்கு பஞ்சமே இருக்காது” என்றார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிய ZEE தமிழ் Chief Channel Officer திரு. வி.எஸ்.ராகவன்,

“ZEE Tamizh தொடர்ந்து புதிய, வித்தியாசமான நிகழ்ச்சிகளை audience-க்கு கொடுத்துக்கிட்டு வருகிறோம்.

அந்த வகையில், இன்று Sa Re Ga Ma Pa மற்றும் Mass Pasanga Vs Class Ponnunga என்ற இரண்டு புதிய shows-ஐ launch பண்ணுகிறோம்.

Sa Re Ga Ma Pa வெறும் singing show கிடையாது; பல பேருடைய talent மற்றும் கனவுகளுக்கு ஒரு பெரிய platform. இந்த புதிய season இன்னும் பிரம்மாண்டமாகவும், music, emotion, entertainment நிறைந்ததாகவும் இருக்கும்.

இந்த journey-க்கு நம்ம judges Vijay prakash, Srinivas மற்றும் Shweta Mohan-ன் support மிகப் பெரிய strength.

அதேபோல், Sa Re Ga Ma Pa மூலமாக entertainment-ஐ தாண்டி பல சமூக மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறோம் என்பதில் என்றும் பெருமை கொள்கிறோம்.

Mass Pasanga Vs Class Ponnunga ஒரு fun-filled entertainment show மட்டுமல்ல; ஆண், பெண் இருவருடைய differences-ஐ புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் appreciate பண்ணிக் கொள்ளும் ஒரு புதிய experience.

இந்த show-க்கு Arya மற்றும் Regena mentor மற்றும் role model-ஆக இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்த இரண்டு shows-ம் audience-க்கு புதிய experience-ஐ கொடுக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.

Kaushik Narasimhan – Programming Head பேசியதாவது

“இந்த இரண்டு shows-ம் இதுவரை நீங்கள் பார்த்திராத அளவுக்கு ஒரு பெரிய scale-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Sa Re Ga Ma Pa இன்று ZEE Tamizh-ன் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியிருக்கிறது. இந்த புதிய season இன்னும் பிரம்மாண்டமாகவும், audience எல்லாரும் ரசிக்கிற மாதிரியும் இருக்கும்.

அதேபோல், Mass Pasanga Vs Class Ponnunga முழுக்க முழுக்க fun, energy மற்றும் entertainment நிறைந்த ஒரு புதிய experience-ஆக இருக்கும்” என்றார்.

ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் நடுவர்களாகவும், அர்ச்சனா தொகுப்பாளராகவும் இணைந்து வழங்கும் சரிகமப நிகழ்ச்சி சனி & ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.

மாஸ்-ஐ கொண்டாடவும், கிளாஸை ரசிக்கவும் ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இணையும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’…

கிகி விஜய் மற்றும் அசார் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ZEE தமிழில் பார்க்க மறக்காதீங்க!

Our Score