full screen background image

தி பாரடைஸ் – சினிமா விமர்சனம்

தி பாரடைஸ் – சினிமா விமர்சனம்

தெலுங்கு சினிமாவே ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த படம். ஏன்னா, நானியின் போன படம் ‘தசரா’ மிகப்பெரிய வெற்றியைத் தெலுங்கில் மட்டுமல்ல, மற்ற சவுத் இந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த அளவுக்கு ரொம்பவும் அருமையான படமாக அது இருந்தது. ஆனால், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், நமக்கு மிகப்பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. காரணம், இந்தப் படத்தில் இருக்கிற அதிகப்படியான வன்முறைக் காட்சிகள்தான்; வேறொன்றுமில்லை.

இந்தப் படம் நடப்பது 1970களின் கடைசியில், ஹைதராபாத், செகந்திராபாத் நகரின் பக்கத்தில் இருக்கும் ஒரு இடத்தில். ஒரு குப்பைக்கூளமாக இருக்கும் ஒரு சேரிப் பகுதி. அங்கேயே ஒரு ஐயாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன; ஐயாயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களுடைய சமூகத்துப் பெயரே ‘சவாரி’ என்கிற ஒரு சமூகம். அவங்களுக்கு இந்தியாவில் அடையாள அட்டையோ, எந்த ஒரு அங்கீகாரமோ கிடையாது. அவர்கள் பெயர் கூட எந்த ரிஜிஸ்டரிலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி ஒரு மக்களை ஓர் அடிமையாக வைத்திருக்கிறார் அந்தப் பகுதியில் லோக்கலில் இருக்கின்ற ஒரு மிகப்பெரிய புள்ளி மோகன் பாபு. அவரும் அவருடைய மகனும் அந்த இடத்திலேயே ஒரு மிகப்பெரிய அறிவிக்கப்படாத அரசனாகவும் இளவரசனாகவும் அந்தப் பகுதியிலேயே இருக்காங்க. அந்தப் பகுதி மக்களை வாட்டி வதைத்து, சாராயம் காய்ச்ச வைத்து, அவங்களை வந்து ஒரு குற்றப்பரம்பரையினர் மாதிரியே நடத்திட்டு இருக்காங்க.

அதில பிறந்து வளர்ந்து வர்றவர்தான் ஹீரோ ‘சடையன்’ என்ற நானி. அவருக்கு சடை இரண்டு இருக்கும். அதை ஒரு குறியீடாக வெச்சிருக்கிறதுனால ‘சடையன்’னு பேரு. அவருடைய அம்மா சம்மக்கா. அவருடைய அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் ஒரு சின்ன பிரச்சனை. அம்மாவை எல்லாரும் தப்பாப் பேசுறாங்க அப்படின்னு மகன் புரிஞ்சிகிட்டு அம்மா மேல கோபமாக இருப்பார். அந்த நேரத்துல ஒரு இடத்துல ஏற்பட்ட சண்டையில ஒரு கொலையைச் செய்து விடுகிறார் நானி. அதனால அவரைப் பதினாலு வருஷம் ஜெயில்ல வெச்சிடுறாங்க. ஜெயில்ல வெச்சிருந்து திரும்பி வெளியில வரும்போது நல்ல புத்துயிர் பெற்று ஒரு மாபெரும் வீரனாக வெளியில வர்றாரு. வர்றவரு வந்து தன்னுடைய அம்மா மேல இன்னும் கோவத்துல இருக்காரு. இப்ப அவருக்கு வந்து ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லை; தன்னுடைய சமூகத்தைப் பெருசா வாழ வைக்கணும் அப்படிங்கறது இல்லை. அவருடைய நோக்கம் முழுக்க அந்த மாலிக் மோகன் பாபுவையும் அவருடைய மகனையும் கொலை செய்யணும் அப்படிங்கறதுதான்.

இந்த நேரத்துல அந்த மாலிக் கபூர், இவருடைய அம்மாவை அவமானப்படுத்துறாங்க. அப்புறம்தான் இவருடைய அம்மா எதுக்காக அந்தச் செயலில் இறங்கினாங்க, அவங்க ஏன் அந்தத் தொழிலில் இறங்கி இருந்தாங்க அப்படிங்கிற விஷயமே நானிக்கு அப்புறம்தான் தெரிய வருது. தெரிஞ்ச பின்னாடி, தனக்காகத் தன்னுடைய அம்மா இவ்வளவு தியாகம் பண்ணியிருக்காங்களேன்னு சொல்லி அவர் மேல பாசம் வந்தது. இந்தச் சவாரி மக்களுக்குத் தலைவனாகத் தானே உருவெடுத்து, சவாரி மக்கள் விரும்புவது ஒன்றே ஒன்றுதான்: “எங்களுக்கு அடையாள அட்டை கொடுங்க” அப்படின்னு கேட்கிறாங்க. “அந்த அடையாள அட்டையை நான் பெற்றுத் தருவேன்” அப்படின்னு சொல்லிக் களத்துல இறங்குறாரு.

அவங்க வந்து இதை ஒரு ஈகோ பிரச்சனையா எடுத்துக்கிட்ட மோகன் பாபு, “அது தர முடியாது” அப்படின்னு சொல்றாரு. அதனால அவர் மகனை இவர் கொலை பண்ணிடுறாரு. இப்ப அவரு ரொம்ப கோபப்படும் மோகன் பாபு, மொத்த டீமையும், மொத்த அந்த மக்களையே அழிக்கப் போறேன் அப்படின்னு சொல்லி இறங்குறாரு. அதைத் தடுக்கும் விதமா இவரும் நானியும் சண்டையில இறங்குறாரு. இப்ப இரண்டு பேரும் சண்டையில யார் ஜெயிச்சது? அந்தச் சவாரி மக்களுக்கு நிலைமை கடைசியா என்ன ஆனது? அங்கீகார அடையாள அட்டை அவங்களுக்குக் கிடைத்ததா, இல்லையா? அப்படிங்கறதுதான் இந்தப் படத்துடைய கதைச்சுருக்கம்.

இந்தப் படத்தோட கதையை எப்படிக் கேட்டு நானி எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரியல. ஓவர் ஹைப் (Overhype) ஆன ஒரு ஹீரோயிஸ ஸ்டோரி இது. இப்பதான் யாஷ் வந்து ‘டாக்ஸிக்’ (Toxic) அப்படிங்கற ஒரு படத்தின் மூலமா நம்மளை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுப் போனாரு. இப்ப நமக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியையும் தொடச்சு எடுத்துட்டுப் போயிட்டாரு இந்தப் படத்துல நானி. நிச்சயமா இந்தப் படம் பார்க்கிற எல்லாருக்குமே பிடிக்கல. பிடிக்கலைன்றதை விட, அதிகப்படியான சண்டைக் காட்சிகளும், அதிகப்படியான ஹீரோயிஸமும், அதிகப்படியான வன்முறைக் காட்சிகளும்தான் இந்த படத்தை நாம ரசிக்க முடியாத அளவுக்குப் போயிட்டது.

ஆனால் நடிப்புன்னு பார்த்தா எந்தக் குறையும் வைக்கல நானி. ரொம்ப அழகா நடிச்சிருக்காரு; அற்புதமா நடிச்சிருக்காரு. தன்னுடைய உடல்வாகை ரொம்பவும் உடலை வருத்திக்கொண்டு பல காட்சிகளில் நடிச்சிருக்கிறது நல்லாத் தெளிவாத் தெரியுது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர். நாம அதுக்கு மேல என்ன சொல்ல முடியும்? நல்ல கதையாக இருந்தால் நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால், இதை நம்பக்கூடிய கதை இல்லை அப்படின்னு அவர் சொன்னாலும், நம்பக்கூடிய கதைதான் அப்படின்னு இயக்குநர் தனிப்பட்ட பேட்டிகள்ல சொல்றாரு. ஆனால் படத்துல என்னடான்னா முதல் வரியிலேயே டிஸ்க்ளைமர்ல (Disclaimer) போட்டாங்க: “சவாரி என்ற சமூகம் கற்பனைக் கதை” அப்படின்னு சொல்லிப் போட்டாங்க. கற்பனைக் கதைன்னு போட்டுட்டு, அப்புறம் படத்துக்குள்ள வந்து ஏன் அது உண்மையா நடந்த மாதிரி நீங்க சொல்லியிருக்கணும்? உண்மையா உள்ள நடந்த மாதிரி சந்திரசேகர ராவ் வந்து ஒரு எம்.எல்.ஏ.-வா வர்றாரு. என்.டி. ராமராவ்தான் இவங்களுக்குக் கடைசியா அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இவங்களுக்கு அங்கீகார அடையாள அட்டை கொடுத்ததா படத்துல பதிவு பண்றாங்க. இவ்வளவு ஆதாரங்கள் எல்லாம் இருக்கும்போது அவங்க எதுக்கு இந்த வேலையைச் செய்யணும்? அந்த டிஸ்க்ளைமரே போடாமையே இருந்திருக்கலாம். அதை போட்டுட்டு உள்ள வந்து இல்லைன்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை இல்லையா? முட்டாள்தனமானது.

ஷிகஞ்சா மாலிக் அப்படின்ற கேரக்டர்ல மோகன் பாபு மிரட்டலா வில்லனா நடிச்சிருக்காப்ல. அவருடைய பார்வையே ஒரு மிரட்டல்தான். அவருடைய முகமே ஒரு வில்லத்தனம்தான். எப்பவுமே வில்லத்தனம்தான் அவரு. அவ்வளவு அழகான வில்லத்தனத்தைக் கடைசி வரைக்கும் காட்டியிருக்காரு. அவருடைய மகனா நடிச்சவரும் ஒரு சிறப்பான ஒரு முகம். இப்படி ஒரு வித்தியாசமான முகத்தை நான் பார்க்கல. அழகான ஒரு முகமா ஒரு வில்லன்தான். ஆனால் அதுலயும் ஒரு காமெடியா, “என்னடா இது, இப்படி ஒரு கேரக்டர், இப்படி ஒரு ஆளா இருக்கான்?” அப்படின்னு நம்மளை யோசிக்க வைக்கிற அளவுக்கு ஒரு நல்ல வெரைட்டியா நடிச்சிருக்காப்ல.

அவருடைய அம்மாவாக சம்மக்காவாக நடிச்ச சோனாலி குல்கர்னி ரொம்ப அழகான நடிப்பு அந்த அம்மா. செம்ம! தன்னுடைய அழுத்தமான நடிப்பு இந்த படத்துடைய கதைக்கு அவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறவங்க இவங்க மட்டும்தான், சோனாலி குல்கர்னி மட்டும்தான். அந்த கடைசி காட்சியில் எல்லாம் நம்மளை உருக வைத்துவிட்டார்கள் அவங்க.

அப்புறம் கயாது லோஹர், இந்த காலத்து யூத்துகளுக்குப் பிடிக்குமே அப்படிங்கறதுக்காக அந்தப் பொண்ணை வெச்சு ஒரு கதை பண்ணியிருக்காரு. ஆனால் அது கடைசியா முட்டாள்தனமான திரைக்கதை ஆயிடுச்சு. ஒரு பெத்த அம்மாவே பெத்த மகனை வெச்சு ஒரு குளுஃபி (kulfi) எடுப்பாங்களா? கொஞ்சமாவது யோசிக்க வேணாமா அந்த டைரக்டர்? இந்த கேரக்டர், கயாது லோஹரின் கதையே யாருக்குமே பிடிக்கல படம் பார்க்கிற அத்தனை பேருக்குமே. “அடேய்!” அப்படின்னு சொல்லியே திட்ட ஆரம்பிச்சுட்டாங்க தியேட்டர்ல. அந்த அளவுக்கு ரொம்ப மோசமான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சைக் கொடுத்திருக்காரு இந்த இயக்குநர், இந்த கயாது லோஹருக்கு.

அப்புறம் இதுல கூட நடிச்ச ஐஸ்வர்யா ராவ், அவங்க ஒரு சின்னம்மா மாதிரிக்கு, நானிக்குச் சின்னம்மா மாதிரி அவங்க ஒரு நல்ல கேரக்டர் பண்ணியிருக்காங்க. அப்புறம் வில்லனுக்குக் கூடவே இருக்கிற மேனேஜர் தனிகெள்ளா பரணி. அப்புறம் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு வந்து ஸ்பெஷல் அப்பியரன்ஸ் (Special appearance) வந்து ஆடிட்டு போயிருக்காங்க கீர்த்தி சுரேஷ். இவங்களை எதுக்குக் கூப்பிட்டாங்கன்னு தெரியல. ஆனாலும் கூப்பிட்டதுக்கு பஞ்சம் இல்லாம ஆடிட்டுப் போயிருக்கு கீர்த்தி சுரேஷ். நல்லா இல்லை அப்படிங்கறது நம்முடைய கருத்து. ஏன்னா அதுவே மிகப்பெரிய ஒரு நல்ல நடிகை, சிறந்த நடிகை. இப்படி ஒரு குத்துப் பாட்டுக்கு வந்து ஆடிட்டுப் போனா அடுத்த படத்துல எல்லாம் மக்கள் இதைத்தான் எதிர்பார்ப்பாங்க. இப்ப இதைவிட ஒரு சிறந்த ஒரு நல்ல படத்துல ஹீரோயினா நடிச்சாக்கூட ரசிகர்களின் பார்வை அப்படித்தான் போகும். அது டோட்டலாவே அவருடைய கேரக்டரை, அவருடைய திரையுலக வாழ்க்கையையே பாதிக்கும். கீர்த்தி சுரேஷ் யோசிக்கணும்.

மியூசிக்: அனிருத் ரவிச்சந்தர். சும்மாவா? போட்டுப் பொளந்திருக்காருல! பொளந்து கட்டிட்டாரு. கடைசி வரைக்கும் பாதி வசனம் கூடக் கேட்காத அளவுக்கு இசை அந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு பண்ணியிருக்கு. அதுலயும் பல வசனங்களை வசன உச்சரிப்பு கூட சரியா இல்லாம சவுண்ட் ரெக்கார்டிங் ரொம்ப கம்மியாக வெச்சிருக்காங்க. அதையே நாம உத்துக் கவனிக்க இருக்கும்போது, இந்த மியூசிக் வேற இடையில புகுந்து அடித்துக் காலி பண்ணிடுச்சு. அதுலயும் ஒரே ஒரு பாட்டு கீர்த்தி சுரேஷ் ஆடுற பாட்டை மட்டும் நல்லா ஜெர்சி பசங்க எந்திரிச்சு ஆடுற மாதிரி ஒரு பாட்டைப் போட்டுத் தன்பங்குக்குக் கோடில சம்பளம் வாங்கிட்டுப் போயிருக்காரு அனிருத். ஓகே.

சரி, சி.ஹெச். சாய் அப்படிங்கிற ஒளிப்பதிவு. ஒளிப்பதிவு பிரமாதம். அதெல்லாம் அந்த ஒளிப்பதிவு டீம் எப்படி உழைச்சாங்கன்னே தெரியல, அவ்வளவு அழகான ஒளிப்பதிவு. கண்டிப்பா பாராட்டணும். அவ்வளவு சேரி மக்களை, அவ்வளவு கூட்டம், அந்தப் பகுதி முழுக்க, அந்த அரண்மனை மாதிரி வீட்ல நடக்கிற சண்டை, சண்டைக் காட்சிகளை எல்லாம் படமாக்குறதெல்லாம் அய்யய்யப்பா! அந்த சண்டைக் காட்சிகளுக்கு செஞ்சிருக்காங்க பாருங்க… சண்டை இயக்குநர்கள், அவர்களையும் ரொம்ப ரொம்பப் பாராட்டணும். அவ்வளவு அழகான சண்டை இயக்கத்தைப் பண்ணியிருக்காங்க.

அப்புறம் கலை இயக்கம். அவங்களும் தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் இதுல கொட்டியிருக்காங்க, கலை இயக்குநர்கள் அவினாஷ் கொல்லா. எவ்வளவு பட்ஜெட்னு தெரியல, பட்ஜெட்டுக்கு மேலேயும் கண்டிப்பாக காசு போயிருக்கும். அந்த அளவுக்குத் தன்னுடைய உழைப்பைக் கொட்டியிருக்காங்க கலை இயக்குநர்கள். அவங்களுடைய கைவண்ணத்திலேயே இந்த இடம் அட்டகாசமா அமைஞ்சிருக்கு.

ஸ்ரீகாந்த் ஒதிலா இயக்குநர். தனக்குத் தெரிந்த வழியிலான ஒரு கதையைக் கொடுத்திருக்காரு. உண்மைகள் தெலங்கானா, ஆந்திரா பகுதிகளில் இந்த மாதிரி அடக்கப்பட்ட ஒரு சமூகம்தான் நக்சலைட்டுகளாக மாறினாங்க. அந்த அடக்கப்பட்ட சமூகங்களை, நக்சலைட்டுகளை இன்னைக்குப் புதிதாக ஆட்சிக்கு வந்த பலரும் சுத்தமா அடிச்சு காலி பண்ணிட்டாங்க. அதே சமயம் அவங்களை, “உள்ள வாங்க, நீங்க ஒரு தேசிய நீரோட்டத்தில் கலந்துக்கங்க, ஜனநாயக இயக்கத்தில் கலந்துக்குங்க, நீங்க ஒரு கட்சி கூட ஆரம்பிங்க, கட்சி ஆரம்பிச்சுப் போராட்டம் நடத்துங்க” அப்படிலாம் நிறைய பேர் சொல்லி அவங்களைக் கூப்பிட்டு வெச்சாலும், சில இடையில் இருக்கிற போலீஸ் அதிகாரிகளின் தந்திர வேலையினால அவங்க மறுபடியும் மறுபடியும் துப்பாக்கியைத் தூக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அந்த கட்டாயத்தைத் தாங்கிக்கொண்டு அந்த நக்சலைட் மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகத்தான் துப்பாக்கியைத் தூக்கினார்கள் என்பது பல வரலாறு. அந்த வரலாறைச் சொல்லும் விதமாகத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்காரு.

ஆனால், அதை உண்மையா அந்த வசனத்தில் சொல்லியிருக்க வேண்டும். அதை, “இவ்வளவு மக்களுக்கு நீங்கள் எதுவுமே செய்யாமல் இருக்கிறீர்கள்” அப்படிங்கறது உரிமையைக் கேட்கணும், கெஞ்சிக் கேட்கக் கூடாது அப்படிங்கறதெல்லாம் பல வசனங்கள் இந்தப் படத்தில் வந்திருக்கணும். அதெல்லாம் இயக்குநர் சொல்லாமல் பல இடங்களில் ஹீரோயிச வசனமாகவே நானி பேசுகின்ற பல வசனம் ஹீரோயிசமாகவே போய்விட்டது. அதுதான் இந்தப் படத்தில் ஒரு மிகப்பெரிய குறை.

மூன்றாவதாகச் சொல்லப்போனால், நிச்சயமாக இந்தப் படம் செரிக்க முடியாத ஒரு திரைப்படம்தான். ஒரு நல்ல கதையை வெச்சுக்கிட்டு ஒரு மோசமான திரைக்கதை மேக்கிங்ல இந்தப் படத்தைக் கொடுத்திருக்கார் ஸ்ரீகாந்த் ஒதிலா. நல்ல ஒரு நடிகர் நானி, அதுல சந்தேகமே இல்லை. அவ்வளவு அற்புதமான நடிகர். அவர் தன்னுடைய எஃபோர்ட்டை (effort) முழுசா நூறு சதவீதம் கொடுத்திருக்காரு, அதுல சந்தேகமில்லை. ஆனாலும், அது இந்த படத்தினுடைய கதையோடு நம்மை ஒன்றவிடாமல் செய்துவிட்டது. அதற்கு காரணம் நானி அல்ல; அந்தப் படத்தினுடைய இயக்குநர், மேக்கிங், கதை சொன்ன விதம். அதனுடைய அதிகபட்சமான அந்த ஹீரோயிசத்தைக் குறைத்துவிட்டு, ‘தசரா’ மாதிரியாவது கொஞ்சம் குறைவான ஹீரோயிசத்துல இந்தப் படத்தை செய்திருக்கலாம். செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஏனால், இது உண்மையாக நடந்த கதைதான். ஹைதராபாத், செகந்திராபாத், ஆந்திரா பகுதிகளில் எவ்வளவோ நடந்திருக்கு. இது மாதிரியான ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலைகளும் செய்திருக்கிறார்கள். அந்த ஜனநாயகப் படுகொலையெல்லாம் ஞாபகப்படுத்தும் விதமாக இந்தப் படம் வந்திருக்கணும். ஆனால், இந்தப் படத்தை எடுத்த விதம் நம்முடைய மனதை அந்தப் படத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளிட்டு போயிருச்சு அப்படிங்கறது ரொம்ப வருத்தமான ஒரு விஷயம். அந்த வகையில் நானிக்கு நிச்சயமாக, “இந்தப் படம், இந்த மாதிரியான படங்களை தயவு செய்து ஒத்துக்கொள்ளாதீர்கள்” அப்படின்னு மறுபடியும் மறுபடியும் நாங்க கேட்டுக்கிறோம்.

அதே சமயம் இன்னொருத்தரை கண்டிப்பா கண்டிச்சே ஆகணும். அவரு அந்த ‘கே.ஜி.எஃப்’ (KGF) படத்தை எடுத்த பிரசாந்த் நீல். அந்த மனுஷன் இந்த கே.ஜி.எஃப்-னு ஒண்ணு எடுத்தாரு எடுத்தாரு, இப்ப வரிசையா வர்றதெல்லாம் இதே மாதிரியே கதையைப் படமாக்களாவே வந்துட்டிருக்கு. படமாக்களே அந்த ஸ்டைல்லதான் எடுக்குறாங்க. “போதும்பா, நிறுத்திக்கங்க!” அப்படின்னுதான் சொல்ல வேண்டி இருக்கு. வேற ஒண்ணுமே சொல்ல முடியாது. இதோட இந்த மாதிரியான மேக்கிங்கை நிறுத்திக்கங்க. இந்த மாதிரியான கதையாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை கொஞ்சம் நல்ல விதமா சொன்னீங்கன்னா நன்றாக இருக்கும்.

RATING : 0 / 5

Our Score