full screen background image

மீண்டும் நடிக்க வந்திருக்கும் நடிகர் ஜீவன்!

மீண்டும் நடிக்க வந்திருக்கும் நடிகர் ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்திலும், ‘நான் அவனில்லை’ படத்தில் கிரே ஷேட் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் களமிறங்கியுள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜீவன் படக் குழுவுடன் இணைந்திருப்பது ‘லவ்வர் பாய்’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘காக்க காக்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜீவன், தனது தனித்துவமான திரையிருப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து வழக்கமான கதைக் களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படங்களைத் தேர்வு செய்து ஹீரோவாகவும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீவன் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில், அவரது ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் காட்சிகளை உள்ளடக்கிய சிறப்பு புரோமோ வீடியோவை படக் குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

எனினும், படத்தில் ஜீவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த எந்த தகவலையும் படக் குழு தற்போது வெளியிடவில்லை.

அவரது கதாபாத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

புதிய தலைமுறை கலைஞர்களுடன் அனுபவமிக்க நடிகர் ஜீவன் இணைந்திருப்பது ‘லவ்வர் பாய்’ படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்குகிறார்.

கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தின் கதை, ஜீவனின் கதாபாத்திரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் மற்றும் இதர அப்டேட்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Our Score