‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா இதுவரையிலும் தான் ஏற்று நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ படத்தின் பரபரப்பூட்டும் டீசர் வெளியாகியுள்ளது.
அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
ராஷ்மிகாவின் கம்பீரமான குரலில் ஒலிக்கும், “நான் சோர்ந்துவிட்டேன்… நான் நின்றுவிட்டேன்… நான் தோற்றுவிட்டேன்…” என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது.
ஆனால், அந்த வார்த்தைகளுக்கு நேர்மாறாக அடுத்தடுத்த காட்சிகளில் அவர் எதிர்கொள்ளும் போராட்டமும், வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் கதையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
சமூகத்தின் தடைகள், எதிர்ப்புகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தனியொரு போராளியாக களமிறங்கும் பெண்ணாக ராஷ்மிகாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவர் போராடுவது மட்டுமல்லாமல், போரின் போக்கையே மாற்றும் சக்தியாக உருவெடுப்பதை டீசர் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
படத்தில் ராஷ்மிகா கோண்ட் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த வேடத்திற்காக அவர் தீவிர உடற்பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், சவால் நிறைந்த பல ஆக்ஷன் காட்சிகளிலும் தானே பங்கேற்றுள்ளார்.
பைக் ஓட்டும் அதிரடி காட்சிகள் முதல் ஆபத்தான நீருக்கடிப் போர்க் காட்சிகள்வரை, கதாபாத்திரத்தின் உடல் மொழிக்கும் தீவிரத்துக்கும் ஏற்ப ராஷ்மிகா தன்னைத் தயார்படுத்தியிருப்பது டீசரில் தெளிவாகத் தெரிகிறது.
குறிப்பாக, நீரின் அடிப்பகுதியில் அரிவாளை கையில் ஏந்தியபடி அமர்ந்திருக்கும் ராஷ்மிகாவின் காட்சி, டீசரின் குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
அவரது முகபாவனை, காட்சியின் இருள் மற்றும் பின்னணி இசை ஆகியவை இணைந்து அந்தக் காட்சிக்கு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே கற்பனை செய்த உலகத்தை டீசர் காட்சிகள் மூலம் பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறது படக் குழு.
ஆக்ஷன் மட்டுமின்றி கதாபாத்திரத்தின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது டீசரில் வெளிப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணாவின் கேமரா வேலைப்பாடு, படத்தின் இருண்ட மற்றும் தீவிரமான உலகை வலுவாகக் காட்சிப்படுத்துகிறது.
குறிப்பாக நீருக்கடிக் காட்சிகள் படத்தின் தொழில்நுட்பத் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் வழங்கிய பின்னணி இசை, டீசரின் பதற்றத்தையும் ஆக்ஷன் தருணங்களையும் மேலும் தீவிரப்படுத்துகிறது.
சர்வதேச சண்டைப் பயிற்சியாளர் கெச்சா வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகளும் கச்சிதமான ஆக்ஷன் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தானாவுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், சிவா கந்துகுரி, கார்த்திக் ரஞ்சனி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஷ்மிகாவின் புதிய தோற்றம், வித்தியாசமான கதைக் களம், பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘மைசா’, வரும் நவம்பர் 27, 2026 அன்று,
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தயாரிப்பு: அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்
எழுத்து & இயக்கம்: ரவீந்திரா புல்லே
தயாரிப்பாளர்கள்: அஜய் சாய்ரெட்டி, அனில் சையபுரெட்டி, வீரசாய் கோபா
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணா
இசை: ஜேக்ஸ் பிஜோய்
படத்தொகுப்பு: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்.
கலை இயக்கம்: ஜி. எம். சேகர்
சண்டைப்பயிற்சி: கெச்சா
PRO: சதீஷ் குமார் – S2 மீடியா
மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி
டிஜிட்டல் ஏஜென்சி: ஹாஷ்டேக் மீடியா

Rashmika Mandanna steps into the shoes of a fierce Gond tribal woman in the high-intensity teaser of debutant director Rawindra Pulle’s Pan-India action drama Mysaa.
Chennai: Rashmika Mandanna is all set to showcase a never-seen-before avatar in Mysaa, an ambitious Pan-India action drama directed by debutant filmmaker Rawindra Pulle and produced by Unformula Films. The makers have unveiled the much-awaited teaser, offering a glimpse into a raw, intense and action-packed world led by Rashmika’s powerful character.
The teaser opens with Rashmika’s commanding voiceover: “I am tired… I have stopped… I have lost…” However, the visuals that follow tell a completely different story. What begins as a seemingly defeated voice soon transforms into the journey of a woman who refuses to surrender, standing alone against the challenges and barriers surrounding her.
Rashmika’s character is portrayed as a fearless warrior who takes on every obstacle head-on. More than just a fighter, she emerges as a force capable of determining the course of the battle itself.
In Mysaa, Rashmika plays a Gond tribal woman, a demanding role that required extensive physical preparation and rigorous action training. The actress has pushed herself through challenging sequences, including intense combat portions, bike-riding sequences and daring underwater action.
One of the teaser’s striking moments features Rashmika sitting underwater with a sickle in her hand, creating an eerie and intense visual that instantly grabs attention. Her rugged appearance, body language and fierce expressions further underline the physical and emotional intensity of the character.
The teaser also hints at a story that goes beyond conventional action, with Rashmika’s character seemingly caught in a world of conflict, resistance and survival.
Director Rawindra Pulle brings an ambitious visual world to the screen, with the teaser placing equal emphasis on emotion, atmosphere and large-scale action.
Cinematographer Shreyaas P. Krishna captures the film’s dark and intense setting with striking visuals, while the underwater sequences add a distinctive visual dimension to the teaser.
Jakes Bejoy’s intense background score complements the action-driven mood, building tension throughout the teaser. International action choreographer Kecha has designed the combat sequences, which appear sharp, physical and raw.
The combination of large-scale production values, atmospheric visuals, intense action and Rashmika’s transformation gives Mysaa a distinct identity.
Alongside Rashmika Mandanna, the film features Eshwari Rao, Rahul Ravindran, Samuthirakani, Rao Ramesh, Guru Somasundaram, Shiva Kandukuri, Karthik Ranjini, Tarak Ponnappa, Nidhi Singh and others in important roles.
Produced by Unformula Films, Mysaa is set for a simultaneous theatrical release in Telugu, Hindi, Tamil, Kannada and Malayalam on November 27, 2026.
Writer & Director: Rawindra Pulle
Producers: Ajay Saipureddy, Anil Sayyapureddy, Veerasai Gopa
Director of Photography: Shreyaas P. Krishna
Music: Jakes Bejoy
Editor: Karthika Srinivas R
Production Designer: G M Sekhar
Action: Kecha
PRO: Sathish Kumar – S2 Media
Marketing: Manoj Valluri
Digital Agency: Haashtag Media









