இந்தப் படத்துக்கு முதல்ல ‘ராம் லீலா’ அப்படின்னுதான் பெயர் வச்சிருந்தாங்க. ஆனா அப்படி வைத்தால் சர்டிபிகேட் கிடைக்காது அப்படின்னு சங்கிகளின் அரசு மறைமுகமாக உத்தரவிட்டதால் படத்தோட தலைப்பை ‘ராம் அண்ட் லீலா’ அப்படின்னு சொல்லி மாத்தியிருக்காங்க.
இந்தப் படத்திலேயும் கல்யாணம்தான் பிரச்சனை. ஹீரோ ரியோ ராஜ் கல்யாண வயதைத் தாண்டியும் பேச்சுலரா இருக்காரு. ஏன்னா பொண்ணு கிடைக்கல.
எந்த பொண்ணு பார்த்தாலும் ரிஜக்ட், ரிஜக்ட், ரிஜக்ட்னு சொல்லிட்டு போறாங்க. சரி, நம்மளா தேடுவோமானாலும் இவருக்கு பொருத்தமான எந்தப் பொண்ணும் லவ் பண்ணக்கூட அமையல.
அப்பத்தான் எலக்ட்ரிக் ட்ரெயின்ல போகும்போது ஒரு பொண்ணைப் பார்க்கிறார், ஹீரோயின் வர்த்திகாவை. பார்த்தவுடனே பிரியாவுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
அந்தப் பொண்ணை தொடர்ந்து பார்க்கிறாரு, தொடர்ந்து 10 நாளா ஃபாலோ பண்றாரு. கடைசியா 20-வது நாள் அந்தப் பொண்ணைப் பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லிடுறாரு. அந்தப் பொண்ணும் ஓகேன்னு சொல்றாங்க.
ஆனால், “நான் சாயந்திரம் 6:00 மணிக்குள்ள வீட்டுக்கு போயிரணும். அதுக்கு மேல எங்கம்மா என்னை வெளியில விடமாட்டாங்க. எங்க அம்மா ரொம்ப கண்டிப்பானவங்க. எங்க குடும்பமே ரொம்ப கண்டிப்பான குடும்பம்” அப்படி… இப்படின்னு சொல்லிடுறாங்க. இதையெல்லாம் ஹீரோவும் நம்பிடுறாரு.
ஆனாலும் ஒரு நாள் அந்த வீட்டுக்குள்ள போயி எப்படியாவது கண்டுபிடிக்கலாம்னு சொல்லி போகும்போது அவருக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி காத்திருக்கு.
அந்த அதிர்சியைக் கேட்டு நமக்கே ஒரு மாதிரியா இருக்கு. அவர் எப்படி அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்கிறார் என்பதும், அதன் பின்பும் ஹீரோ தன் காதலைத் தொடர்ந்தாரா… இல்லையா… வர்த்திகாவுக்கு என்ன பிரச்சனை… அவங்க குடும்பத்துல என்ன பிரச்சனை…? அப்படிங்கறதுதான் இந்தப் படத்துல ஒரு சுவாரசியமான சஸ்பென்ஸான திரைக்கதை.
அதை இங்க உடைச்சா உங்களுக்கு படம் பாக்குறதுக்கு இன்ட்ரஸ்ட் இருக்காது. அதனால நான் அதை சொல்ல விரும்பல.
மத்தபடி ரியோ ராஜ் ஒரு சாதாரண ஐடி வேலை பார்க்கிறவரு. அந்தக் கேரக்டருக்கு ஏத்த, கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற நடிப்பைத்தான் காண்பிச்சிருக்காரு.
ஆனா ஒரு சில இடங்கள்ல ரொம்ப ஓவர் டோஸா இருக்கு. ஆனாலும் அந்த கல்யாண கலாட்டால எல்லாம் மனுஷனை ரொம்ப ரசிக்க முடிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு கொஞ்சம் நல்ல காமெடியை கொண்டு வந்திருக்காரு. ஒரு சில இடங்களிலேயே அவர் காமெடி ஆக்டராவும் மாறியிருக்காரு. அதை அவர் அப்படியே ஃபாலோ பண்ணாருன்னா நல்லா இருக்கும்.
ஏன்னா இப்போதைக்கு தமிழ் சினிமாவில் காமெடி கலந்த கேரக்டர்களை செய்வதற்கு ஆட்களே இல்லை. ஹீரோக்கள் அதிகமாக இல்லை. ரொம்ப கம்மியா இருக்காங்க.
அப்படி குறைவா இருக்கிறவங்களும் மிகப் பெரிய பட்ஜெட் படத்துல மட்டும்தான் நடிப்பேன்றாங்க. அதனால ரியோ ராஜ் ஒரு மிடில் கிளாஸ் பட்ஜெட்ல நடிக்கிறதுக்கு, ஒரு காமெடி ஹீரோவா நடிக்கிறதுக்கு தன்னை டிரெய்னிங் எடுத்தாருன்னா ரொம்ப நல்லா இருக்கும். நிச்சயமாக அவர் பெரிய ரவுண்டு வரலாம்.
இந்தப் படத்துல ஓரளவுக்கு தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு காமெடியை தன்னுடைய நடிப்பின் மூலமாக அவரு கொண்டு வந்திருக்காரு. அந்த வகையில அவரை நாம பாராட்டணும்.
அடுத்து வர்த்திகா, புதுமுகம். சுத்தமா தமிழ் வராதுன்னு நல்லா முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சு போச்சு. ஏதோ இந்தியாதான், ஆனால் வேற்று மாநிலத்திலிருந்து வந்திருக்காங்க.
ஓரளவுக்கு நடிச்சிருக்காங்க. ஆனா அந்தப் பொண்ணு முகத்தையே க்ளோசப்ல காட்டி, அழகா இருக்கிறதையே திருப்பித் திருப்பிக் காட்டியிருக்காங்க. ஆனாலும் ஓரளவுக்கு அந்தப் பொண்ணும் நடிச்சிருக்காங்க.
அப்புறம் சேத்தன். இந்த வாரம் வந்த ‘மொத ராத்திரி’லேயும் சேத்தன் கலக்கியிருந்தார். இந்தப் படத்திலேயும் கலக்கியிருக்காரு.
படத்துக்குப் படம் தன்னை இம்ப்ரூவ்மென்ட் பண்ணிக்கிட்டு, அவரைப் பார்த்தாலே நாம ஒரு பிடிப்போட இந்தப் படத்தை தொடர்ந்து கடைசிவரைக்கும் பார்க்க வைக்கிற அளவுக்கு ஒரு நல்லதொரு நடிப்பை இந்தப் படத்திலேயும் காண்பித்திருக்கிறார்.
ஹீரோ ரியோ ராஜுவுக்கு அப்பாவான சேத்தனுக்கும், இவருக்கும் இந்தப் படத்துல பேச்சுவார்த்தையே இல்லை. இரண்டு பேரும் தனித்தனியா அம்மா மூலமா தான் பேசிக்கிறாங்க.
அம்மாவா நடிச்ச மாளவிகா அவினாஷ் ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்ப் படத்துல நடிச்சிருக்காங்க.
ஒரு சிறந்த நடிப்பு அப்படின்னே சொல்லலாம். அதுலயும் மகன்கிட்ட மாட்டிக்கிட்டு, அப்பன்கிட்ட மாட்டிக்கிட்டு, மகன் சொல்ற கதையை நம்ப முடியாம, அவங்களுடைய கதையையும் நம்ப முடியாமல், அந்த ஹீரோயின் ஃபேமிலியோட கதையையும் நம்ப முடியாமல் முழிக்கிற இடத்துல எல்லாம் உண்மையா அவங்களுடைய நடிப்பே நமக்கு சிரிப்பை வரவழைச்சிருக்கு. ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கீங்க மேடம்.
அப்புறம் ரியோ ராஜோட காதலி வர்த்திகாவோட அம்மாவா நடிச்ச தீபா வெங்கட். இந்த டைரக்டரை என்ன சொல்றதுன்னே தெரியல?
எப்படி இவருக்கு மனசாட்சி வந்துச்சுன்னே தெரியல. தீபா வெங்கட்ட போய் மாமியாரா நடிக்க வச்சா எப்படிங்க? அவங்க இப்போ இருக்கற தோற்றத்துக்கு ஹீரோயினாவே நடிக்கலாம். இல்லாட்டி ஒரு அக்கா, அண்ணி கேரக்டராவது நடிக்கலாம். ஆனால் அதுக்காக ஒரேடியா கொண்டு போய் அம்மா கேரக்டர்ல நடிக்க வச்சா எப்படி? இந்த ஒரு காரணத்துக்காகவே அந்த இயக்குநரை நாம் கண்டிக்கிறோம்.
மற்றைய நடிகர், நடிகைகளுக்கு ரொம்பவும் பெரிய அளவுக்கான வாய்ப்புகள் இல்லை, நடிப்பதற்கான சூழல்களும் வாய்ப்புகளும் இல்லை.
தொழில் நுட்ப ரீதியிலும் இந்தப் படம் ரொம்பவும் சிறப்புதான். அது இல்லைன்னு சொல்ல முடியாது. இசையை விட ஒளிப்பதிவு தான். இசையைவிட எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒளிப்பதிவுதான்.
ரொம்ப அழகான ஒளிப்பதிவு. கடைசி வரையிலும் எந்த ஒரு சின்ன பிசிறுகூட இல்லாம ரொம்ப அழகா கொண்டு போயிருக்கார் ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுனன்.
அந்தக் கல்யாணக் காட்சி கலாட்டாக்களை எல்லாம் அவ்வளவு அழகா காண்பித்திருக்கிறார்.
ஒரு ஆர்டிஸ்ட்டை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும் அளவுக்கு கேமரா கோணத்துல அவ்வளவு அழகா வச்சு நம்மை சிரிக்க வச்சிருக்காரு ஒளிப்பதிவாளர்.
அப்புறம் அங்கித் மேனன் இசையமைச்சிருக்காரு. பாடல்கள் ஓகே அப்படின்னு சொல்லலாம். ஆனா மாண்டேஜ் ஷாட்ஸா இடையில இடையில கட் பண்ணி கட் பண்ணி போடுறதுனால நமக்கு அந்த அளவுக்கு ஃபீலிங் ஒண்ணும் வரல.
படத்தோட தொகுப்பாளர் ஒய்.என்.சி. சிவா. இதுவொரு காமெடி படம் அப்படிங்கறதுனால அதுக்கேத்த மாதிரி காட்சிகளைத் தொகுக்கணும் அப்படிங்கறதுக்காக ரொம்ப பிரயத்தனப்பட்டுதான் காட்சிகளைத் தொகுத்திருக்காரு.
அதுல கல்யாண கலாட்டா, அதுக்கப்புறம் ஹீரோயினை உடனே கொண்டுபோயி ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின்ல ஏத்தி விடணும் அப்படிங்கறதுக்காக இவரு பண்ற அந்த பதட்டமே நமக்கு கொஞ்சம் காமெடியா இருந்தது.
ஆனால் அது ஒரு ஸ்பீடு. அதை அழகா எடிட்டிங் பண்ணி தொகுத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அது நிச்சயமாக பாராட்டுக்குரிய ஒரு இடம்.
இந்தப் படத்தோட அடிநாதமே வர்த்திகாவின் ஃபேமிலியோட சஸ்பென்ஸ்ஸான அவங்களுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்.
இதே கதை, திரைக்கதையில் ‘டபுள் ஆக்குபன்சி’ அப்படின்னு சொல்லி ஒரு படம் மூணு மாசத்துக்கு முன்னாடி வந்துச்சு. அந்தபீ படத்தோட கதைதான் இந்தப் படத்தோட சஸ்பென்ஸ் கதை. அது எப்படின்னு தெரியலை.
ரெண்டு பேருமே எந்த இங்கிலீஷ் படத்திலிருந்து சுட்டாங்கன்னு தெரியல. ரெண்டு பேருமே சுட்டாலும் அழகாத்தான் சுட்டிருக்காங்க.
ஏன்னா அவங்க ‘டபுள் ஆக்குபன்சி’யும் நல்லா இருந்தது. அந்தப் படமும் நல்லா போயிட்டு இருக்குது. ரொம்ப சின்ன பட்ஜெட்ல எடுத்த படம், அதுவே 20, 30 கோடிக்கு மேல வசூல் பண்ணுச்சாம்.
அவங்களே எதிர்பார்க்காத ஒரு வெற்றி ‘டபுள் ஆக்குபன்சி’. இப்போ அதே மாதிரி இவங்களும் நமக்கு வெற்றி கிடைக்குமா அப்படின்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கலாம்.
ஆனாலும் இப்படி சுட்ட கதையை நாகரிகமா டைட்டில்ல ‘இந்தப் படத்திலிருந்து எடுத்தோம்’னு சோ போட்டிருக்கலாம்ல? அதானே நியாயமானது!
இதெல்லாம் நியாயமில்லாதது. இப்படி எல்லாம் செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை இயக்குநரே. அந்த இயக்குநரை இந்த ஒரு காரணத்துக்காக நம்ம கண்டிக்கிறோம்.
இந்த கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் இல்லைன்னா இந்தப் படத்துடைய அந்த கதை திரைக்கதையை வேற மாதிரியாகவும் கொண்டு போயிருக்கலாம்.
அவங்க அம்மா, அப்பா ரொம்ப கண்டிப்பானவங்க. அதனால அப்படி இருக்காங்க அப்படின்ற மாதிரியும் கொண்டு போயிருக்கலாம்.
ஆனால் 6:00 மணிக்கு மேல ஆணாக மாறுவது மாதிரி, காலையில 6:00 மணிக்கு மேல ஆண் பெண்ணா மாறுவது மாதிரியெல்லாம் பிரச்சனைகளை வைத்து ஒரு சில இடங்களில் மட்டும்தான் காமெடியை கொண்டு வர முடியும். சீரியஸ்ல அது ஜெயிக்காது.
அதே மாதிரி இந்தப் படத்துலயும் கடைசியா லவ்வே விட்டுப் போச்சு. அப்படின்னு சொல்லிட்டு போற இடத்துல எல்லாம் நம்மளால அதுல ஒன்ற முடியல.
ஏம்பா, காமெடியா எடுத்திருக்கான். இதுல போய் நம்ம சீரியஸா எடுத்துக்கிட்டு, நம்ம சீரியஸா புரிஞ்சுகிட்டு என்ன பிரயோஜனம் அப்படின்னு நமக்கு நாமளே சமாதானம் சொல்லிக்க வேண்டி இருக்கு.
அந்த வகையில் இந்தப் படம் ஒரு கவன ஈர்ப்புக்காக அந்தத் திரைக்கதையே வச்சிருக்காங்க போல இருக்கு.
ஆனாலும் பரவாயில்லை. டைரக்ஷன்ல குழப்பம் இல்லாமல் பண்ணியிருந்தாலும், கதை, திரைக்கதையில் இந்த குழப்பம் இருப்பதால் நம்மாள் சட்டென்று இதை ஜீரணிக்க முடியல.
ஆனாலும் இந்தப் படம் கடைசி வரையிலும் இருந்து பார்க்கக் கூடிய அளவுக்கு, ஒரு தடவையாவது பார்க்கலாம் என்று சொல்லுகின்ற அளவுக்கு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில அந்த இயக்குநரை இந்த ஒரு காரணத்திற்காக நாமும் பாராட்டுகிறோம்.
மற்றபடி இது மாதிரி இன்னொரு இங்கிலீஷ் படத்தை எல்லாம் சுட்டுப் படம் எடுப்பதற்கு பதிலா இங்கேயே எடுக்கப்பட வேண்டிய கதைகள் இன்னும் நிறையவே இருக்கு. அதையெல்லாம் எடுங்க சாமிகளா அப்படின்னு இயக்குநர்கள்ட்ட வேண்டிக்கிறோம்.
இந்தப் படமும் ஒரு முறை நிச்சயமாக நீங்கள் பார்த்து மகிழலாம், சிரிக்கலாம். பாருங்கள்.
RATING : 3.5 / 5









