full screen background image

“என்னைவிட இன்னொரு நடிகை அழகா?” – இயக்குநரிடம் கோபப்பட்ட நடிகை அனுமோல்!

“என்னைவிட இன்னொரு நடிகை அழகா?” – இயக்குநரிடம் கோபப்பட்ட நடிகை அனுமோல்!

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார்,
விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து & இயக்கம் – சராஜ் சீலன், 
ஒளிப்பதிவு – சதீஷ் ஜி,
இசை – கே. கிருஷ்ணகுமார்,
படத் தொகுப்பு – வி.ஜே. சபு ஜோசப்,
கலை இயக்கம் – தாமு,
பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன், 
நடன அமைப்பு – ஸ்ரீ கிருஷ், பிரசாந்த்,
ஒப்பனை – கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்,
ஆடை வடிவமைப்பு – கே. பராஹுல்,
தயாரிப்பு வடிவமைப்பு – லட்சுமி, கிருஷ்ணலட்சுமி & சுப்ரியா டெசிரா
ஸ்டில்ஸ் – சிவா,
ஒலி வடிவமைப்பு – ஹரிஹரன்,
ஒலி கலவை – சிவ் டெக் மெடி,
லைன் புரொட்யூசர் – பாலிக் பார்ட்னர்ஸ் ஸ்டுடியோ,
எக்ஸிக்யூட்டிவ் மேனேஜர் – மனோபாலா கண்ணன்,
பி.ஆர்.ஓ – ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்,
பப்ளிசிட்டி டிசைனர் – வி.எம். சிவக்குமார்
இணை இயக்குநர் – ஸ்வானி ராஜலிங்கம்
இணை இயக்குநர்கள் – என். சபீர், விக்னேஷ் விஜய ராஜ்
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் – பி. சூர்யா பிரகாஷ்,
கிரியேட்டிவ் புரொட்யூசர் – எழில் சத்யா,
இணை தயாரிப்பாளர் – வெங்கல் எம். லிங்கேஸ்வரன்.
தயாரிப்பாளர் – கண்மணி ரங்கநாதன்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மதியம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் பேசும்போது, “இந்த பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம். ஆனால் ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு. நம்ம சமுதாயத்தில் நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம்.

குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர். 20 வருங்களாக இயக்குநராக முயற்சி செய்தார். ஆனால் சூழ்நிலை அவருக்கு இயக்குநராக விடல. அது நான்தான்.

இந்தப் படத்துக்காகவும் நிறைய புக் ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்குப் பெருமையா இருக்கு…” என்றார்.

படத்தின் இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன் பேசும்போது, “சினிமாத்துறை எனக்கு புதுசு. இந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு இன்னொரு படம் எடுக்க ஆசையா இருக்க காரணம் இந்த படத்தின் இயக்குநர்தான்…” என்றார்.

படத்தின் கலை இயக்குநர் தாமு பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குநருக்கு லைவ்வவிடவும் செட்டு போட்டு பண்ணாத்தான் பிடிக்கும். எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தாங்க. அதற்கு ரொம்ப நன்றி…” என்றார்.

படத்தின் எடிட்டர் சாபு பேசும்போது, “என்னோட உதவியாளர் லோகேஷ், மற்றும் பிரகாஷ்க்கு என்னுடைய நன்றி. சரஜ் சீலன் முதல் பட இயக்குநர் மாதிரி தெரியல, எல்லாமே ரொம்ப சிறப்பா பண்ணிருந்தாரு. இயக்குநர் உடைய 20 வருட கனவு உண்மை ஆகி இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..” என்றார்.

சிறப்பு விருந்தினரான இயக்குநர் மித்ரன் ஜவகர் பேசும்போது, “ஒரு டைரக்டருக்கு மனைவியே ப்ரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம். குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப் பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்…” என்றார்.

சிறப்பு விருந்தினரான ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது, “இயக்குநர் 23 வருட கனவுதான் இந்தப் படம். இதை உண்மையாக்க ஒரு நேர்மை வேண்டும் .அது அவர்கிட்ட இருக்கு. இந்தப் படத்தோட தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது உண்மைக்கு நெருக்கமான படமா இருக்கும்னு நான் நம்புறேன்.

ஒரு படத்தின் எழுத்தும், ஒளிப்பதிவும் இருட்டிலிருந்து உருவாவது. எழுத்தாளருக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை வழி நடத்திப் போறவர்தான் இயக்குநர்.

டைரக்டர் ஒவ்வொரு படியா போனால்தான் அந்த வழி அவருக்கு தெரியும். கடவுளின் பார்வையில் பார்க்க வேண்டும். நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் ஒரு நீளமான பயணமும் அனுபவமும் கிடைக்கும்…” என்றார்.

நடிகை நயன சாய் பேசும்போது, “இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு என்னுடைய முதல் நன்றி. என்னுடைய அம்மா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அதற்கு ரொம்ப நன்றி. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் அவர்களுடன் நடித்தது சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தது கோ டைரக்டர் சாமி அண்ணா அவர்களுக்கு ரொம்ப நன்றி . இசையமைப்பாளருக்கும் என்னுடைய நன்றி.

பிஆர்ஓ ரியாஸ் சார் மற்றும் பராஸ் நான் சென்னை முதல் முறை வந்ததிலிருந்து எனக்கு எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தார் அதற்கு என்னுடைய நன்றி.

இந்தப் பட படத்தை தியேட்டர்ல பார்த்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. கடவுள்கிட்டயும் நான் வேண்டிக்கிறேன்…” என்றார்.

நடிகர் விஜய் விஸ்வா பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு என்னுடைய நன்றி. அதற்கு காரணமாக சாமி அண்ணனுக்கும் நன்றி.

சமீபத்தில் நான் அமெரிக்கா போயிருந்தப்போ தமிழ் சங்கம் மேடையில அமைச்சர் ராஜ்மோகன் இருந்தாரு. அந்த விழாவை நான்தான் தொகுத்து வழங்கினேன். அவருடைய அனுமதியோட ஒரு பாடலை போட்டோம். அது என்னுடைய பாட்டு. அதற்கு கேதான் இசை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி.

ரெண்டு யுனிவர்சிட்டி கூட எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒன்னு தமிழ்நாடு யுனிவர்சிட்டி. இன்னொன்னு மலையாளம் யூனிவர்சிட்டி. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல்கூட நடிச்சது. இவர்களிடமிருந்து நிறைய கத்துக்கிட்டேன். அதற்கு என்னுடைய நன்றி…” என்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுதல். இப்போது நிறைய சின்ன படங்கள் வருது. அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை. அரசாங்கம் மூலமா ஒரு ஓடிடி தளம் தொடங்கினால் அது எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும். இது என்னுடைய வேண்டுகோள்.

இந்தப் படம் சொசைட்டிக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கு. எல்லாரும் இந்த படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க…” என்றார்.

நடிகர் பிபின் பேசும்போது, “இந்தப் படம் நான் நடிச்சதிலேயே ரொம்ப வித்தியாசமான படம். இந்தப் படத்தினுடைய கதை ரொம்ப நேர்த்தியானது. குரு சோமசுந்தரம் அனுமோல்கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோருக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் சாய் விக்கி பேசும்போது, “இது என்னுடைய முதல் மேடை. நான் இதுவரையிலும் சின்னச் சின்ன கேரக்டர்கள் பண்ணி இருக்கேன். ஆனால் இந்தப் படத்துல எனக்கு ஒரு பேர் எல்லாம் கொடுத்து படம் முழுக்க டிராவல் பண்ணி இருக்கேன். அது சந்தோஷமா இருக்கு.

ஏழு வருஷமா முயற்சி செஞ்சிட்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கார். எல்லாரையும் நான் குறிப்பிட்ட சொல்லல. ஆனா ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் மூலமாத்தான் பட வாய்ப்பு தர்றாங்க ஆனா இந்த இயக்குநர் அதையெல்லாம் பார்க்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப் படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்லுது. ஒரு ஸ்ட்ராங்கான விஷயத்தை ரொம்ப மென்மையா சொல்லக் கூடிய படம் இது.

இசையமைப்பாளர் கே-வின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய இசையில் நான் நடிச்சதும் எனக்கு சந்தோஷமா இருக்கு.

குரு சோமசுந்தரம் மாதிரி ஒரு நடிகர் இங்கே யாருமே இல்லை. ‘ஜோக்கர்’ படத்தில் இருந்து நான் அவரை பாலோ பண்றேன். அனுமோல்கூட நடிச்சதும் சந்தோசமா இருக்கு. கௌசல்யா அவர்களுக்கு நடந்தது மத்தவங்களவிட ரொம்ப மோசமானது அதிலிருந்து அவங்க மீண்டு வந்து இருக்காங்க. அவங்களுக்கு வீரவணக்கம்தான் சொல்லணும்.

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களைகூட கொலை பண்ணது கிடையாது. ஆனால் காதல் பண்ணா இங்க ஆணவ படுகொலை பண்றாங்க அந்த சொசைட்டில நம்ம இருக்கோம், இது மாறனும். அதுக்கான படம்தான் இந்த ‘பாரிஸ் கஃபே’.

நடிகை அர்ச்சனா பேசும்போது, “இது என்னுடைய மூன்றாவது படம், என்னுடைய பத்து வருட உழைப்பு. சின்ன வயசுல நிறைய பாடி ஷேம் பண்ணி இருக்காங்க. ஆனால் இப்போ கேமராவில் என்னை பார்க்கும்போது எனக்கே அழகா தெரியுது. அதற்கு ஒளிப்பதிவாளருக்கு நன்றி.

இயக்குநர் இந்தப் படத்தோட கதையை ஒவ்வொரு லைனும் மைண்ட்லயே வச்சிருப்பாரு. குரு சோமசுந்தரம் நடிக்கிற எல்லாத்தையும் ரசிக்கலாம். அனுமோல் அவர்களுடைய கண்ணு அப்படியே நடிக்கும்.

கே “உங்களுடைய மியூசிக் ரொம்ப அழகா இருக்கு”. இது ரொம்ப அழகான கதை இந்த சமுதாயத்திற்கு தேவையான படம்..” என்றார்.

நடிகர் மற்றும் ப்ரொடியூசரான கணேஷ் அவர்கள் பேசும்போது, “என்னுடைய போட்டோ பார்த்து தேர்ந்தெடுத்தேனு சொன்னாரு இயக்குநர். எனக்கு இந்த கதை ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு இந்த டீமை ஒரு பாசிட்டிவான எனர்ஜி ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு மீனிங் இருக்கும் இந்தப் படத்தில் நடிச்சது சந்தோஷமா இருக்கு..” என்றார்.

நடிகை அனுமோல் பேசும்போது, “எல்லோருக்கும் வணக்கம் .இந்தப் படம் ரொம்ப முக்கியமான படம், நான் சமுதாயத்திற்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

இயக்குநர்கூட பேசும்போது ஒரு கான்ஃபிடன்ட் இருந்துச்சு. அதனாலதான் இந்த படத்தில் நான் நடித்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் எல்லார் கூடேயும் நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இசையமைப்பாளர் கே-வின் தமிழ் பாட்டைவிட மலையாள பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

குரு சோமசுந்தரம்கூட நடித்தது சந்தோஷமா இருந்துச்சு எனக்கு அவரு மேல கோபம். நான் அழகா இல்ல. என்னைவிட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்காங்கன்னு என்கிட்டயே சொல்றாரு. இப்பக்கூட அவர்கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டைதான், இவர் மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு எல்லோரிடமும் ஒரே மாதிரிதான் பழகுவார்.

இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு. இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன படம் இல்லை ரொம்ப முக்கியமான படம்..” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் கே பேசும்பொழுது, “இங்கே வந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி. இது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷலான படம்.

நான் நல்ல படம் தேடிக்கிட்டு இருந்த அந்த டைம்ல இந்தப் படம் எனக்கு வந்துச்சு. இயக்குநருக்கு ரொம்பவேம் நன்றி. படத்துல ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து ஒர்க் பண்ணி இருக்கோம். இந்தப் படத்துல பாடல்களைப் பாடிய எல்லாருக்கும் என்னுடைய நன்றி. என்னுடைய டீமுக்கும் என்னுடைய நன்றி…” என்றார்.

நடிகர் குரு சோமசுந்தரம்  பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு ரொம்பவும் சந்தோஷம். டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்பவும் பிடித்துப்போய் உடனேயே ஒத்துக்கிட்டேன்.

நிறைய புது படங்களின் இயக்குநரின் மனைவி வேலைக்கு போவாங்க. ஆனா இந்தப் படத்தோட இயக்குநரின் மனைவி இந்தப் படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க. அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.

இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட் படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்காங்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை.

இந்தப் படத்துடைய எடிட்டருக்கு நன்றி. இசையமைப்பாளர் கே-வுக்கு என்னுடைய நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி. இந்தப் படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார். ரொம்ப கஷ்டமான ரோல். அதை ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். அவருக்கும் எனது  வாழ்த்துக்கள்.

கௌசல்யா இங்கே வந்ததுக்கு நன்றி பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது. கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்‌ கூடாது. நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும். இந்தப் படம் அதைப் பற்றித்தான் பேசுகிறது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி…” என்றார்.

சிறப்பு விருந்தினரான கௌசல்யா சங்கர் பேசும்பொழுது, “இந்தப் பட விழாவுக்கு சிறப்பு விருந்தினரா என்ன ஏன் கூப்பிட்டாங்கன்னா சந்தேகம் இருந்தது. ஏன்னா, களத்துல வேலை செய்யறதுதான் என்னுடைய வேலை.

சினிமா எனக்கு தெரியாது. ஆனால், இந்தப் படம் பார்த்ததும் எனக்குப் புரிந்தது. இது சமூகத்திற்கு ரொம்பவும் தேவையான படம்.

இந்தப் படத்தில் காதல் ரொம்ப இயல்பாக இருந்தது. ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி இருக்கணும் அதையும் இந்தப் படம் தெளிவா காட்டியது.

தமிழ்நாட்டுல இப்பவும் பெண்களின் உரிமைக்காகவும், எல்லோருடைய உரிமைக்காகவும் நிறைய பேரு போராடுறாங்க. அதனுடைய தொடர்ச்சிதான் இந்தப் படம்.

ஒரு பெண் மாறினால் அந்த சமூகம் மாறும். ஒரு பெண் இல்லாமல் எல்லோரும் மாறும்போது இந்த சமூகம் ஜாதியை கடந்து நிற்கும் அப்படின்றத இந்தப் படம் காட்டுச்சு.

ஒரு பெண் தன்னுடைய இணையை எதை வைத்து தேர்ந்தெடுப்பது என்று தவறாக இருக்கும் பிற்போக்குத்தனத்தை இந்தப் படம் உடைத்திருக்கிறது.

ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியா தமிழ்நாட்டுல நடந்துகிட்டு இருக்கு. அதை பண்றது பெற்றோர்களாக இருக்காங்க. அதற்கு ஒரு மாற்றமா இந்தப் படம் இருக்கு.

ஆணவப் படுகொலைக்கு எதிரா தனிச் சட்டம் வேணும்னு அரசுகிட்ட கேட்டு இருக்கோம். அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்.

குரு சோமசுந்தரம் ஒரு கதாபாத்திரமா நடிக்காமல் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்…” என்றார்.

படத்தின் இயக்குநர் சராஜ் சீலன் பேசும்போது, “என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது. என்னுடைய அப்பாதான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார். வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம்.

படித்த ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர்கள் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றித்தான் அதிகமா பேசுவோம் சினிமாதான் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் இவங்கதான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குநர்கள்.

நான் பாக்யராஜ் சாரை இந்தப் படத்துக்கு கூப்பிடனும்னு நினைத்திருந்தேன். அவரு இப்ப இல்ல. அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

என் அப்பாவுக்கு கலைத் துறையில் ரொம்பவும் ஆர்வம். அவர் மூலமாகத்தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்துதான் கத்துக்கிட்டேன்.

ஒரு நிமிட ஷார்ட் பிலிமை என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன். அந்தப் படம் பிலிம் பெஸ்டிவலில் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதாக மாறியது.

அதற்குப் பிறகு எல்லாமே சினிமாதான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம்கிட்ட முதல்முறை கதை சொன்னதும் அவர் “ரொம்ப நல்லா இருக்கு.. நானே பண்றேன்” என்று சொல்லிட்டார். அவர்கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி குரு சார்.

அனுமோல்கிட்ட போன்லதான் கதை சொன்னேன். அவரும் நடிக்க ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி.

படத்துல நடிச்ச நடிகர், நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி.

சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர். நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குநரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது. அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி…” என்றார்.

இந்த ‘பாரிஸ் கபே’ திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர உள்ளது.

Our Score