இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்;
ஏனெனில், அன்றுதான் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார்.
1975-ஆம் ஆண்டு இதே நாளில்தான் ரஜினி நடித்த முதல் திரைப்படமான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் வெளியானது.
இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ‘தர்மன்’ படக் குழுவினர் அனைவரும் இணைந்து,
தொடரும் இந்தப் பயணத்தில் ‘ரஜினியிசம்’ எனும் உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பது படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக்கியது.
51 YEARS OF SUPERSTAR RAJINIKANTH: A LEGACY CELEBRATED ON THE SETS OF DHARMAN.
August 15 marks a landmark day in Indian cinema — the day Superstar Rajinikanth made his unforgettable entry into the world of films. On this day in 1975, Apoorva Raagangal released, marking the beginning of a remarkable cinematic journey that would go on to create one of the most celebrated superstar in Indian cinema.
Fifty-one years since his entry into cinema, the milestone was celebrated on the sets of DHARMAN with a special cake-cutting ceremony in the presence of Superstar Rajinikanth, and Director Ashwath Marimuthu joined with the entire cast and crew of DHARMAN in commemorating this iconic milestone. As the journey continues, the sets of DHARMAN witnessed a special moment in celebrating 51 years of Rajinism — a legacy that continues to inspire, entertain and create history.
DHARMAN, starring Superstar Rajinikanth, is produced by Thiru. Kamal Haasan and R. Mahendran under the banners of Raajkamal Films International and Turmeric Media, marking the celebration on the film’s set all the more special.










