full screen background image

‘மண்டாடி’ படத்தின் ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் வெளியானது!

‘மண்டாடி’ படத்தின் ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் வெளியானது!

தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெறாத கடலோர மக்களின் வாழ்வியலையும், பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியின் பின்னணியையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ‘மண்டாடி’.

ஆக்‌ஷன், விளையாட்டு, காதல், உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

கடலின் சீற்றத்துக்கு மத்தியில் நடைபெறும் பாய்மரப் படகுப் போட்டி, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற போட்டியாளர்களின் வேகம், எதிர்பாராத சவால்கள், தனிப்பட்ட போராட்டங்கள் என விறுவிறுப்பான களத்தைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது.

வழக்கமான விளையாட்டுப் பின்னணியிலான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, கடலோர வாழ்க்கையின் இயல்பையும் அங்குள்ள மனிதர்களின் உணர்வுகளையும் கதையின் மையத்தில் இணைத்திருப்பது ‘மண்டாடி’ படத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

சூரியுடன் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், அச்யுத் குமார், பாலா சரவணன், மிதுன், கீர்த்திகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment Pvt. Ltd.) நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.

கடலோரப் பகுதிகளின் கடினமான சூழல்களில் படமாக்கப்பட்டுள்ள ‘மண்டாடி’, பிரம்மாண்டமான கடல் காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான கதைக் களத்தையும் இணைத்து, ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடலாக ‘உசுரே நீதான் புள்ள’ வெளியாகியுள்ளது.

காதலை வருடும் ‘உசுரே நீதான் புள்ள’

‘மண்டாடி’ படத்தின் ஆக்‌ஷன் மற்றும் போட்டிக் களத்துக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு மென்மையான உலகத்தை அறிமுகப்படுத்துகிறது ‘உசுரே நீதான் புள்ள’ பாடல்.

சூரி மற்றும் மஹிமா நம்பியார் இணைந்து தோன்றும் இந்தப் பாடல், இருவருக்குமிடையேயான காதல், நெருக்கம் மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.

இதமான மெலடி, எளிமையான அதே நேரத்தில் மனதைத் தொடும் வரிகள், கதாநாயகன்–கதாநாயகி இடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி என பாடல் முழுவதும் காதலின் மென்மையான உணர்வு வெளிப்படுகிறது.

படத்தின் பரபரப்பான விளையாட்டு பின்னணிக்கு நடுவே, கதாபாத்திரங்களின் தனிப்பட்ட உலகத்தையும் உறவின் ஆழத்தையும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

“சுருக்கு பைய்யா சுருங்கும் காலம் வர, உன்னில் ஒன்னா வாழ வேணும் புள்ள…” என காதலின் ஏக்கத்தையும், வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தும் வரிகள் பாடலுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன.

‘உசுரே நீதான் புள்ள’ பாடலுக்கு ஜெயஸ்ரீ மதிமாறன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கபில் கபிலன் மற்றும் சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையில் உருவாகியுள்ள இந்த மெலடி பாடல், ‘மண்டாடி’ படத்தின் காதல் காட்சிகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் கடலை மையமாகக் கொண்ட அதிரடி போட்டி, மறுபுறம் அதற்குள் மலரும் காதல் என ‘மண்டாடி’ திரைப்படம் பல்வேறு உணர்வுகளை ஒரே கதைக்குள் கொண்டு வருவதை அதன் பாடல்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.

கடல், போட்டி, வெற்றி, போராட்டம், காதல் என பல்வேறு உணர்வுகளை தன்னகத்தே கொண்டுள்ள ‘மண்டாடி’, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Tamil cinema is set to explore a rarely seen world with ‘Mandaadi’, an upcoming film that takes audiences into the lives, emotions and struggles of coastal communities while placing a traditional sailboat race at the heart of its story.

Starring Soori in the lead, ‘Mandaadi’ is directed by Mathimaaran Pugazhendhi. Built around the traditional paimara boat race, the film combines intense sporting action, competition, ambition and human emotions to present a distinctive sports-action drama.

The film features an ensemble cast comprising Soori, Suhas, Mahima Nambiar, Sathyaraj, Ravindra Vijay, Achyuth Kumar, Bala Saravanan, Mithun and Keerthika in prominent roles.

Music for the film is composed by G.V. Prakash Kumar, while the project is produced on a grand scale by RS Infotainment Pvt. Ltd., headed by renowned producer Elred Kumar.

Shot across challenging coastal locations, ‘Mandaadi’ promises spectacular visuals and an emotionally driven narrative. The film is expected to offer audiences a fresh theatrical experience by bringing together the intensity of a high-stakes boat race and the lives of the people connected to it.

Following the release of the first single, ‘Mandaadi Mandaadi’, which garnered attention, the makers have now unveiled the film’s second song, ‘Usure Neethaan Pulla’.

A Melodious Love Song That Brings the Romance to Life

Unlike the high-energy sporting backdrop of the film, ‘Usure Neethaan Pulla’ explores the softer and more emotional side of ‘Mandaadi’. Featuring Soori and Mahima Nambiar, the song beautifully captures the love and emotional connection shared between their characters.

With a soothing melody, heartfelt lyrics and the natural chemistry between the lead pair, ‘Usure Neethaan Pulla’ brings out the beauty of love in a simple yet deeply emotional manner.

The lyrics, including the evocative lines expressing the desire to live together with one’s beloved for a lifetime, add to the song’s romantic appeal and emotional depth.

‘Usure Neethaan Pulla’ has lyrics penned by Jayashree Mathimaaran, while Kapil Kapilan and Sanjana have lent their voices to the song. Composed by G.V. Prakash Kumar, the melody is expected to become an important emotional highlight of the film.

While ‘Mandaadi’ promises thrilling moments through its intense boat-racing sequences, the latest song reveals the film’s tender romantic side, offering a glimpse into the relationships and emotions that exist beyond the sporting arena.

Blending coastal life, competition, ambition, action, romance and human emotions, ‘Mandaadi’ is gearing up for a theatrical release on September 10, 2026.

Our Score