full screen background image

6 இயக்குநர்கள் இயக்கம் செய்யும் பிரதீப் ரங்கநாதன் – மமீதா பைஜு நடிக்கும் புதிய படம்!

6 இயக்குநர்கள் இயக்கம் செய்யும் பிரதீப் ரங்கநாதன் – மமீதா பைஜு நடிக்கும் புதிய படம்!
 
பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு  
உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து – தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.
 
தி ஆல்ஃபா யூனிட்  இயக்கத்தில் உருவாகும் இந்த #PRS01 திரைப்படத்தில் மமீதா பைஜு, அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்
 
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பிரதீப் ராகவ் மேற்கொள்கிறார்.
 
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வரும் இந்தப் படத்தை பி.ஆர்.ஷோ  நிறுவனம் சார்பில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி, தயாரிக்கிறார்.

தமிழ் – தெலுங்கு – மலையாளம் – ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்திற்கு #ஆர்எஸ்01 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த காணொளிக்கான பின்னணி இசை முன்னணி நட்சத்திரங்களின் திரைத் தோற்றம் – கான்செப்ட் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் என்பதாலும்,
 
வுமன் சென்ட்ரிக் சப்ஜெக்ட் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
 
‘டிராகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் -‌அஸ்வத் மாரிமுத்து கூட்டணி இணைந்திருப்பதாலும்…
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் தருணத்தில் அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

 

Our Score