full screen background image

வேகமெடுக்கும் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படம்!

வேகமெடுக்கும் ‘விக்கல்ஸ்’  விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படம்!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான விக்கல்ஸ்’ விக்ரம், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

தற்போது படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ரொமான்டிக் காமெடி பின்னணியில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ‘விக்கல்ஸ்’ விக்ரமுடன் இணைந்து ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துவருகிறார். இருவரின் புதிய திரைஜோடியும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹரிஷ் கோமே படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் சாகர் மற்றும் சந்தேஷ் இணைந்து உருவாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் தலைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது 30 நாட்கள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்துள்ளன. இதன் மூலம் மொத்த தயாரிப்புப் பணிகளில் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்டாண்ட்-அப் காமெடியனாக தனித்த அடையாளம் பெற்ற விக்கல்ஸ் விக்ரமும், பிட்னஸ் மாடலான ஆர்த்தி கிருஷ்ணாவும் இணைந்து நடிப்பது படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

காதல், நகைச்சுவை மற்றும் இளைய தலைமுறையினருக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Vikkals Vikram’s Hero Debut ‘Light Weight Baby’ Gains Momentum; 60% of Shooting Completed

Bigg Boss fame Vikkals Vikram, who is making his debut as a lead actor with Light Weight Baby, is steadily progressing with the film’s production. The makers have officially announced that 60% of the film’s shooting has been successfully completed.

Directed by K.C. Guru, Light Weight Baby is being crafted as a romantic comedy entertainer. Vikkals Vikram stars opposite Aarthi Krishna, with the fresh on-screen pairing already generating curiosity among audiences.

The film’s cinematography is handled by Pramod Kodiyan, while Saravanan Subramaniam composes the music. Harish Gome is in charge of editing. Produced under the banner of Hitha Studios, the project is jointly backed by producers Sagar and Sandesh.

Following the positive response to the film’s title announcement, the team has now completed 30 days of shooting. The first two schedules, held in Chennai and Bengaluru, have been wrapped up successfully, taking the overall production progress to 60%.

One of the major attractions of the film is the pairing of stand-up comedian Vikkals Vikram and fitness model Aarthi Krishna. With its blend of romance, comedy, and youthful entertainment, Light Weight Baby has continued to build anticipation among moviegoers. Fans are now eagerly awaiting further updates from the makers in the coming weeks.

Our Score