full screen background image

திருக்குறள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது!

திருக்குறள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது!

” திருக்குறள் ” திரைப்படத்தின் இரண்டாம் பாகம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம் பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார்.

திருக்குறள் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் A. J. பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை..

அருட்தந்தை G.U.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்புதான் உலகக் கவனம் பெற்றது நம் குறள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், ரோம் கிரேக்கம் போன்ற மேற்குலக நாடுகளுடனும், சைனா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

இப்படத்தில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மேலும் பல ஆளுமைகள், கலாச்சாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்ககால பண்பட்ட நாகரீகம் படமாக்கப்பட உள்ளது.

சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் HOLLYWOOD கலைஞர்களின் பங்களிப்பும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளது.

பெருமை வாய்ந்த நமது தமிழ் பண்பாட்டை திருக்குறள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே இப்படத்தின் நோக்கமாகும்.

“ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு திரைப்படம் வெளியாகிறது” என்றார் இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன்.

Our Score