full screen background image

ஆகாஷ் முரளி நாயகனாக புதிய பிரம்மாண்ட படம் தொடக்கம்!

ஆகாஷ் முரளி நாயகனாக புதிய பிரம்மாண்ட படம் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அதே தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தைத் தொடங்கி வைத்தது நிகழ்வுக்கு தனித்துவமான முக்கியத்துவத்தை அளித்தது.

மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

1970-களின் தொடக்ககால சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், குதிரைப் பந்தய உலகத்தை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. நேர்மை, உயர்ந்த லட்சியம் மற்றும் வெற்றியை நோக்கி போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லவிருக்கும் இந்த படம், காலப்பின்னணி படைப்பாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தக் காலகட்டத்தின் சென்னை நகர வாழ்க்கை, கலாச்சாரம், சமூக சூழல் மற்றும் நகரின் தனித்துவமான தோற்றத்தை மிக நுணுக்கமாக திரையில் கொண்டு வர படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான செட்கள் மற்றும் காலத்திற்கேற்ற கலை வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மாறுபட்ட கதைக்களங்களையும், உயர்தர தயாரிப்புகளையும் வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ், இந்தப் படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலப்பின்னணி, குதிரைப் பந்தய உலகம் மற்றும் ஒரு இளைஞனின் கனவுப் பயணம் ஆகிய அம்சங்களால் கவனம் ஈர்த்துள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.

 

Romeo Pictures Brings 1970s Chennai to Life: New Big-Budget Film Starring Akash Murali Launched

 

One of Tamil cinema’s most successful production houses, Romeo Pictures, known for consistently delivering quality and commercially successful films, has officially launched its next grand production with a traditional pooja ceremony. The film will feature young actor Akash Murali in the lead role and marks the directorial debut of Harshavardhan, a former associate director of acclaimed filmmaker H. Vinoth.

The launch event was held in Chennai and was attended by Tamil Nadu’s Minister for School Education, Tamil Development, and Information & Publicity, Raj Mohan, as the chief guest. The minister formally inaugurated the project and extended his best wishes to the cast and crew.

Interestingly, Raj Mohan had made his directorial debut with “Baba Black Sheep,” which was also produced by Romeo Pictures. His presence at the launch of the production house’s latest venture, now as a cabinet minister, added a special significance to the occasion.

The event was also graced by leading filmmaker H. Vinoth and actor Ravi Mohan, who conveyed their wishes and support to the team.

Set in early 1970s Chennai, the film revolves around the fascinating world of horse racing. It tells the inspiring story of a young man whose honesty, determination, and lofty ambitions drive him through struggles and challenges on his journey toward success.

To authentically recreate Chennai of the 1970s, the filmmakers are currently engaged in extensive pre-production work. Every aspect of the era—from its lifestyle and culture to the city’s unique atmosphere—is being carefully researched and designed to ensure a rich and immersive cinematic experience.

Known for backing unique stories and delivering large-scale productions, Romeo Pictures is mounting this project on a lavish budget. The makers have also announced that details regarding the rest of the cast and technical crew will be revealed soon.

With its intriguing period setting, horse-racing backdrop, and an emotionally engaging story of dreams and perseverance, the film is already emerging as one of the most anticipated upcoming projects in Tamil cinema.

Our Score