full screen background image

“என் படத்துக்கு இளையராஜாவின் இசை!” — இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்!

“என் படத்துக்கு இளையராஜாவின் இசை!” — இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது பத்தாவது திரைப்படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். ஆனால் இந்தப் படம் ஒரு சாதாரண மைல்கல்லாக மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலகின் இரு தலைமுறைகளை இணைக்கும் ஒரு சிறப்பு தருணமாக மாறியுள்ளது.

‘பீட்சா’ முதல் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வரை தொடர்ந்து வித்தியாசமான கதைகளால் ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் சுப்புராஜ், இந்த முறையில் இசை உலகின் மாபெரும் ஜாம்பவான் இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம், இளையராஜாவின் 1540-வது படமாக உருவாகுவது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், தயாரிப்பாளர்கள் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸுடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. உலகளவில் கவனம் பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இணைவதும் இதுவே முதல் முறை.

இந்தப் படம் குறித்து பேசும் போது இசைஞானி இளையராஜா, “சினிமாவும் இசையும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. கதையின் நேர்மையும் அதை உருவாக்கும் மனிதர்களின் உண்மையும் எனக்கு முக்கியம். கார்த்திக் சுப்புராஜின் சினிமா மீதான காதல் அவருடைய படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்திற்காக உருவாக்கிய பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதை தனி இசை ஆல்பமாகவே வெளியிடலாம் என்ற எண்ணம் வந்தது,” என்று பகிர்ந்துள்ளார்.

இதேபோல், தனது நீண்ட நாள் கனவு நனவானதாக கூறிய கார்த்திக் சுப்புராஜ், “இளையராஜா சாருடன் பணியாற்றுவது என் வாழ்க்கையின் மிக உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் ஒன்று. என் பத்தாவது படமே இந்த இணைப்பை சாத்தியமாக்கியது மிகவும் சிறப்பு. ரசிகர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை திரையரங்கில் அனுபவிக்க ஆவலாக இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட் ஜோதி தேஷ்பாண்டே, “கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய திரையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோரும், “இந்திய சினிமாவின் தனித்துவமான இயக்குநரான கார்த்திக் சுப்புராஜும், தலைமுறைகளை கடந்த இசை மாயாஜாலம் கொண்ட இளையராஜாவும் இணைந்திருப்பது மிகப் பெரும் சந்தோஷம். இந்த திரைப்படம் அனைவராலும் பேசப்படும் படமாக அமையும்,” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை, கதை, காட்சியமைப்பு என மூன்றையும் ஒரே நேரத்தில் கொண்டாட வைக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் அதிகரித்துள்ளது.

 

“Karthik Subbaraj’s Dream Comes True with Ilaiyaraaja’s Music!” — Director Wraps Up His Landmark 10th Film

Acclaimed filmmaker , known for creating a distinct space in Tamil cinema with his unique storytelling style, has officially wrapped the shoot of his tenth feature film. More than just another milestone in his career, the project has now become a special cinematic moment that unites two generations of creative brilliance.

From Pizza to Jigarthanda DoubleX, Karthik Subbaraj has consistently impressed audiences with unconventional narratives. This time, the filmmaker has joined hands with legendary composer for the very first time. The film also marks Ilaiyaraaja’s 1540th project, making the collaboration even more significant and exciting for cinema lovers.

The film, which went on floors in November last year, has now completed its shooting schedule. It is being produced on a grand scale by Oscar-winning production house , led by producers and , in association with . This also marks Karthik Subbaraj’s first collaboration with the globally acclaimed production banner.

Speaking about the project, Ilaiyaraaja shared, “Cinema and music are deeply emotional to me. What matters most is the honesty of the story and the sincerity of the people behind it. Karthik Subbaraj’s passion for cinema is clearly visible in his work. While composing the background score for this film, I felt it was so special that it deserved to be released as a standalone music album.”

Calling the collaboration a lifelong dream fulfilled, Karthik Subbaraj said, “Working with Ilaiyaraaja sir is one of the most emotional and memorable moments of my life. The fact that this happened in my tenth film makes it even more special. I’m eagerly waiting to experience this film with audiences on the big screen.”

, President of Jio Studios, stated, “This film, where powerful storytelling meets unforgettable music, will offer audiences a truly immersive theatrical experience.”

Producers Guneet Monga Kapoor and Achin Jain also expressed their excitement, saying that the coming together of a visionary filmmaker like Karthik Subbaraj and a musical legend like Ilaiyaraaja is something truly special, and they believe the film will become one of the most talked-about cinematic experiences in the coming days.

With storytelling, music, and visual grandeur coming together, the film is already generating huge anticipation among fans and the film industry alike.

Our Score