full screen background image

‘ஒரு சிறுவன்… ஒரு தேசிய உணர்வு!’ – சர்வதேச கவனத்தை ஈர்த்த ‘ஃபிளாக்’ திரைப்படம்

‘ஒரு சிறுவன்… ஒரு தேசிய உணர்வு!’ – சர்வதேச கவனத்தை ஈர்த்த ‘ஃபிளாக்’ திரைப்படம்

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு உணர்வின் பிரதிபலிப்பாக மாறும் தருணங்கள் உண்டு. அந்த வகையில், ஒரு சிறுவனின் பார்வையில் இந்தியாவின் தேசிய உணர்வை சொல்ல முயலும் படைப்பாக உருவாகியுள்ளதே ‘ஃபிளாக்’ திரைப்படம்.

ஐ அண்ட் ஐ மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வைரப்பிரகாஷ் தயாரித்து, இயக்குநர் எஸ்.பி. பொன்சங்கர் இயக்கியுள்ள இந்த படம், அதன் உள்ளடக்கம் மற்றும் அணுகுமுறையால் ஆரம்பத்திலேயே கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படம் 16வது தாதாசாகெப் பால்கே விருதைப் பெற்றிருப்பது, அதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

பத்திரிக்கையினருடன் பேசிய தயாரிப்பாளர் வைரப்பிரகாஷ், “இந்தியா முழுவதும் வாழும் 140 கோடி மக்களின் தேசிய உணர்வை ஒரு குழந்தையின் கதையின் மூலம் சொல்லும் முயற்சிதான் ‘ஃபிளாக்’. இது சாதாரண கதை அல்ல, மனதைத் தொடும் ஒரு அனுபவம்,” என தெரிவித்தார். இந்த விருதை தனது கைகளால் பெற்ற அனுபவம் பெருமையும், மறக்க முடியாத மகிழ்ச்சியுமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, ஒளிப்பதிவும் இயக்கமும் ஒரே நேரத்தில் எஸ்.பி. பொன்சங்கர் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இசையை ரவிவர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் இணைந்து அமைத்துள்ளார்கள். படத்தொகுப்பை வரதன் கவனித்துள்ளார்.

நடிகர்கள் தரப்பில், பாலிவுட் நடிகர் மிக்கி மஹிஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், ‘இட்லி கடை’ படத்தில் இளம் தனுஷாக நடித்த தீஹான் இந்த படத்தில் மனதை நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கே சாமி, பாபுஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இந்த படத்தின் மற்றொரு விசேஷம், அதன் டெய்லர் வெளியீடு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகர்கள் தங்களது மொழிகளில் டெய்லரை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் பரவலான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது.

“இந்த படம் வெறும் விருதுகளைப் பெறுவதற்காக அல்ல, மக்களின் மனதில் நிலைத்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய விருதையும் நிச்சயமாக பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது,” என்று தயாரிப்பு குழு உறுதியாக தெரிவித்துள்ளது.

ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் இந்தியாவின் உணர்வுகளை பேசும் ‘ஃபிளாக்’, சினிமா உலகில் ஒரு வித்தியாசமான தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.

Our Score