தயாரிப்பாளர் அபிஷேக் முரளி, தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். உண்மைத்தன்மை, தனித்துவமான பார்வை மற்றும் சினிமாவிற்கான ஆழமான பற்றுடன் இந்த நிறுவனம் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை ஒட்டி வெளியிட்ட குறிப்பில், தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தை அவர் நினைவுகூர்ந்தார். அலுவலகம் அல்லது படப்பிடிப்பு தளங்களில் அல்லாமல், கடலூரில் உள்ள கிருஷ்ணாலயா திரையரங்கில் சிறுவயதில் படம் பார்த்த அனுபவம்தான் தனது சினிமா காதலுக்கு விதை போட்டதாக அவர் கூறினார். திரையில் விரியும் கதைகளின் தாக்கம், அவற்றின் உணர்ச்சி, அவை தரும் அனுபவம் – இவை அனைத்தும் தனது சிந்தனையை வடிவமைத்ததாக அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ஒரு ஈர்ப்பாகத் தொடங்கிய சினிமா ஆர்வம், காலப்போக்கில் ஆழமான உறவாக மாறியது. மனிதர்கள், உரையாடல்கள், அன்றாட வாழ்க்கை தருணங்களில் கதைகளை காணும் பார்வை வளர்ந்ததாகவும், சினிமாவை வாழ்க்கையின் பிரதிபலிப்பாக பார்க்கத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளம் வயதிலேயே பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர், 16வது வயதில் குடும்ப வியாபாரத்தில் இணைந்து கல்வியையும் தொடர்ந்தார். கடலூரிலிருந்து சென்னை, பின்னர் சிங்கப்பூர், பர்மிங்ஹாம், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் பெற்ற அனுபவங்கள், பல்வேறு கலாச்சாரங்களை அறியவும் தனது பார்வையை விரிவுபடுத்தவும் உதவியதாக அவர் கூறினார்.
அவரை ஆழமாக பாதித்த சினிமா தருணங்களில் ஒன்று ‘குசேலன்’ திரைப்படத்தில் வரும் வசனம்: “கடவுள் யாருனு நான் பார்த்தா… அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்.” இந்த வரிகள் சினிமா என்பது உணர்ச்சிகளையும் உண்மையையும் வெளிப்படுத்தும் வலுவான ஊடகம் என்ற அவரது நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ குறித்து பேசுகையில், இது ஒரு சாதாரண தயாரிப்பு நிறுவனம் அல்ல என்றும், முக்கியமான கதைகளை சொல்லும் படைப்புத் தளமாக இருக்கும் என்றும் அபிஷேக் முரளி தெரிவித்தார். புதிய குரல்கள், புதுமையான சிந்தனைகள் மற்றும் பார்வையாளர்களை உணர்ச்சிப்பூர்வமாக இணைக்கும் கதைகளை உருவாக்குவதே நோக்கம் என அவர் கூறினார்.
“நான் அனைத்து பதில்களுடனும் இந்த துறைக்கு வரவில்லை. ஆனால் அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கம் இருக்கிறது. சிறந்த சினிமா என்பது சூத்திரப்படி உருவாகாது; அது தைரியம், பார்வை மற்றும் புதிய கோணத்தில் உலகத்தை காணும் மனப்பான்மையிலிருந்து வருகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கம் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக உருவாகி வந்த கனவின் நிறைவேற்றமாகவும் பார்க்கப்படுகிறது. ‘சாம்பார் கார்டெல் ஸ்டுடியோஸ்’ மூலம் தரமான, நீண்ட காலம் நினைவில் நிற்கும் கதைகளை உருவாக்கும் பயணத்தை அபிஷேக் முரளி துவக்கியுள்ளார்.
From Theatre Seat to Storytelling Journey – Producer Abhishek Murali Launches ‘Sambar Cartel Studios’
Chennai: Marking his 30th birthday, producer Abhishek Murali has officially announced the launch of his new film production company, Sambar Cartel Studios. The banner aims to focus on authenticity, unique perspectives, and a deep passion for cinema.
In a heartfelt note, Abhishek Murali reflected on how his journey with cinema began—not in offices or film sets, but as a young boy sitting in the quiet darkness of Krishnalaya Theatre in Cuddalore. Even without fully understanding every moment on screen, he was deeply moved by the magic of storytelling, an experience that stayed with him and eventually shaped his path.
What began as a simple fascination gradually turned into a deep passion and connection with stories. Over time, he developed the ability to find stories in people, conversations, and fleeting moments, ultimately seeing cinema as a reflection of life itself.
Taking on responsibilities at a young age, Abhishek joined his family business at 16 while continuing his education. His journey later took him from Cuddalore to Chennai, and across international cities including Singapore, Birmingham, and Sydney. These experiences exposed him to diverse cultures and perspectives, enriching his creative outlook.
One of the key inspirations that deeply impacted him was a line from the film Kuselan: “When I wondered who God is… it is cinema that shows it before my eyes.” This dialogue strengthened his belief in cinema as a powerful medium to express truth, emotion, and meaning.
Speaking about Sambar Cartel Studios, Abhishek Murali emphasized that it is more than just a production house—it is a creative platform aimed at telling meaningful stories. The company will focus on fresh voices, distinct perspectives, and narratives that emotionally connect with audiences.
“I did not enter this industry with all the answers, but with a clear intention to create something meaningful. Great cinema is not built on formulas; it comes from courage, vision, and the ability to see the world differently,” he stated.
This milestone marks not just the launch of a production venture, but the realization of a long-held dream. With Sambar Cartel Studios, Abhishek Murali embarks on a new journey to bring impactful and memorable stories to life.









