full screen background image

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம்-ஊர்வசி நடிக்கும் ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம்-ஊர்வசி நடிக்கும் ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படம்!

தமிழ் சினிமாவில் குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ், இம்முறை முற்றிலும் புதிய கோணத்தில் திரில்லர்-காமெடி கலவையுடன் “பரிமளா & கோ” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

“தலைவன் தலைவி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது 12வது படைப்பாக பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒவ்வொரு படத்திலும் புதுமையைத் தேடும் அவரது தனிச்சிறப்பு போல, இந்த முறையும் திரில்லர் மற்றும் நகைச்சுவையை சமநிலையுடன் இணைத்து, குடும்பங்களும் ரசிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“பரிமளா & கோ” திரைப்படம், ஒரு வித்தியாசமான குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்த குடும்ப உறுப்பினர்களின் தனித்துவமான குணாதிசயங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் அபூர்வமான சம்பவங்களும் கதையின் கருவாக அமைகின்றன. சென்னை நகரத்தில் தொடங்கும் இந்த பயணம், கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை விரிகிறது. சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் அம்சங்களோடு, நகைச்சுவை கலந்த காட்சிகள் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஃபர்ஸ்ட் லுக்கில் கதாப்பாத்திரங்களின் தனித்துவமான தோற்றங்களும், அவர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் காட்சிப்படுத்தலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இளம் நடிகர் சந்தோஷ் சோபன் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்து நடித்துள்ளனர். மேலும், சாண்டி – அனந்திகா சனில்குமார் ஜோடியும் படத்தில் இடம்பெறுகின்றனர்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு, “தலைவன் தலைவி” படத்திற்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் முக்கியமான முழுநீள வேடத்தில் நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், இதுவரை காணாத விதமான காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். அதேபோல் சிங்கம்புலி, பக்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பரிமளா & கோ” திரைப்படம், Lyca Productions நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து உருவாகியுள்ளது. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், Foxn இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

திரில்லும் நகைச்சுவையும் இணைந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு: Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions

கதை, திரைக்கதை, இயக்கம்: பாண்டிராஜ்

ஒளிப்பதிவு: ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC

இசை: Foxn

எடிட்டிங்: பிரதீப் E. ராகவ்

கலை இயக்கம்: T. ராமலிங்கம்

ஸ்டண்ட்: கலாய் கிங்ஸன்

நடன அமைப்பு: சாண்டி, பாபா பாஸ்கர்

மியூசிக் சூப்பர்வைசர்: சந்தோஷ் குமார்

ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

ஒலிப்பதிவு: M.R. ராஜாகிருஷ்ணன்

சவுண்ட் எஃபெக்ட்ஸ்: ஷ்ரேயாஸ் பத், அருண் பிரசாத்

VFX: B.R. வெங்கடேஷ்

DI: Knack Studios

கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர்

விளம்பர வடிவமைப்பு: ADFX Studio

பத்திரிக்கை தொடர்பு: சதீஷ் (AIM)

தயாரிப்பு மேற்பார்வை: ராமதாஸ் & விஜய் C

சப்டைட்டில்ஸ்: ரேக்ஸ்

 

Our Score