full screen background image

உதயமானது தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

உதயமானது தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

தென்னிந்தியத் திரையுலகைப் பாதுகாக்கவும், தயாரிப்பாளர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முன்னணித் தயாரிப்பாளர்கள் ஹைதராபாத்தில் ஒன்று கூடி ‘தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ (SIFPA) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

திரையரங்கு ஒப்பந்தங்கள் மற்றும் ஓடிடி (OTT) ரிலீஸ் கால அவகாசம் குறித்து மற்ற சங்கங்கள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் தயாரிப்பாளர்களைப் பாதிப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்த இந்த அமைப்பு,

இது தொடர்பாகக் கூட்டாக ஆலோசித்து முடிவெடுக்க ஒரு உயர்மட்டக் குழுவையும் அமைத்துள்ளது.

தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் வியாபாரம் மற்றும் வெளியீடு குறித்த முடிவுகளைத் தற்போதைக்குத் தாங்களே சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும்,

ஓடிடி ரிலீஸ் விண்டோ தொடர்பாக எந்தச் சங்கத்திற்கும் இப்போதைக்கு உறுதிமொழி கடிதம் தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா துறையில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பாளர்களின் உரிமைகளை நிலைநாட்டவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score