full screen background image

கங்கை அமரன், தர்ஷன், ரோஜா நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம்

கங்கை அமரன், தர்ஷன், ரோஜா நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம்

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

நம் மண்ணின் வாழ்வியல் மற்றும் சமூக நியாயங்களை மையமாகக் கொண்டு, மணல் கொள்ளை பிரச்சனையை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

ஜனநாயக நாட்டில் ஒருவரின் அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் எந்த அதிகாரத்தாலும் பறிக்கப்படக் கூடாது என்பதையே இப்படம் வலியுறுத்துகிறது.

கிராமத்து மக்களின் வாழ்க்கையில் நேரும் அத்தகைய சிக்கல்களை உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்வதே இப்படத்தின் கரு.

வெளியான டிரெய்லரில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்தியாவில், 75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பில் இருப்பது காட்டப்படுகிறது.

அந்த பாதுகாப்புக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது.

இதன் மூலம் படம் ஒரு சுவாரஸ்யமான மற்றும் சமூக உணர்வுகளைக் கிளறும் கதையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

பன்முகத் திறமையாளர் கங்கை அமரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் திரைக்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவான இப்படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பாளர்களாக G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் பணியாற்றியுள்ளனர்.

அமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score