‘நிமிர்ந்து நில்’, ‘என்னை அறிந்தால்’, ‘GOAT’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் சமீபத்தில் SUN NXT OTT-யில் வெளியான “உன் பார்வையில்” ஆகிய படங்களில் நடித்த “பார்வதி நாயர்” அதிரடி கவர்ச்சியில் கலக்கியுள்ள புதிய படம் “ஒன் ப்ளஸ்”.
திரை உலகில் நீண்ட அனுபவம் பெற்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கிய வித்யாசாகர் ‘ஒன் ப்ளஸ்’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார்.
பார்வதி நாயருக்கு ஜோடியாக புதுமுக நாயகன் தேஜா மற்றும் ரிஷி, யுவஸ்ரீ ஆகியோரும் நடித்துள்ளனர். ஷரவணசுப்பையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவர்ச்சி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தை J&J VISUALS சார்பில் K.V.ஜெயராம் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: S.மோகன், இசை: விஜய சங்கர்.Bsc Dft. படத்தொகுப்பு : A.K.நாகராஜ், நடனம்: S.L.பாலாஜி, Special Effect: Siva(Red Fox). கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வித்யாசாகர். இந்த கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.












