இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.
பட வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் ‘மை லார்ட்’ படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
“மை லார்ட்” படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய படமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில், மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும் படமாகவும் இருக்கும்.
சசி சாருக்கு “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்” மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட் வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது. இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.
இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.
அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட் மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.
என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.
பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
நடிகை சைத்ரா பேசியதாவது..,
நடிகர் சசிகுமார் பேசியதாவது…,
நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். ‘மை லார்ட்’ அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும்.
படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக் குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.









