full screen background image

மீசைய முறுக்கு-2 – சினிமா விமர்சனம்

மீசைய முறுக்கு-2 – சினிமா விமர்சனம்

ஏற்கனவே ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி “மீசைய முறுக்கு” முதல் பாகம் வந்து ஹிப்ஹாப் ஆதி என்ற அந்த ஒரு இளைஞனை தமிழகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. ஜென் இசட் (Gen Z)… அந்த ஜென் சி இளைஞர் முதல் படியில் ஹிப்ஹாப் ஆதியை உட்கார வைத்தது அந்தப் படம்தான்.

இப்போ அதே மாதிரியான கதையில் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்காரு. இந்தப் படத்தை அவ்னி மூவீஸும், பென்ஸ் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிச்சிருக்காங்க. படத்தில் ஆதி, சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன், விஜய் வரதராஜ், பாபா பாஸ்கர், யோகி பாபு, பகவதி பெருமாள், ஷாரா, சபரீஸ் ராமச்சந்திரன் ஒரு பெரிய கூட்டமே நடிச்சிருக்கு.

இசை ஹிப்ஹாப் தமிழாவே போட்டிருக்காரு. படத்தொகுப்பு பென்னி ஆலிவர்; ஒளிப்பதிவு பாலாஜி சுப்பிரமணியம்; கூடுதல் ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம் கொடுத்திருக்காரு; ஆடை வடிவமைப்பு பூர்ணிமா ராமசாமி; கலை இயக்கம் வி. எஸ். தினேஷ்குமார்.

இந்தப் படம் ஒரு மூன்று தலைமுறையின் வாழ்க்கை சொல்கின்ற படம். அதே சமயம் ‘கானா பாடல்கள்’ அப்படிங்கிற ஒரு பாடலின் அதனுடைய துவக்கம், வரலாறு, அது எப்படி மக்களிடையே பிரபலமானது, அது ஏன் சபா கச்சேரிகளில் இடம் பெறவில்லை, அதை உருவாக்குவதற்கும், அதை வழிநடத்துவதற்கும், அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் அந்தப் பாடகர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க அப்படிங்கிறதை இந்தப் படத்தில் சொல்லியிருக்காங்க. அதுதான் படத்துடைய கதை.

மூன்று தலைமுறையினர் இந்தப் படத்தில் வர்றாங்க. அந்த மூணு தலைமுறையும் இந்தக் கானா பாடலை எப்படியாவது மக்கள்கிட்ட பெரிய அளவுக்கு ரீச் ஆகி தாங்களும் வளர்ந்து விடணும் அப்படின்னு சொல்லி துடிச்சவங்க. ஆனால், அது இரண்டு தலைமுறையினர் அதுல ஃபெயிலியர் ஆயிட்டாங்க. ஆனால் கடைசி தலைமுறை, இப்ப ஜென் சி பீரியட்ல இருக்கிற அந்தத் தலைமுறை அதை வெற்றிகரமாகக் கொண்டு போய் மக்கள்ட்ட சேர்த்து பேரு வாங்குறாங்க, புகழ் வாங்குறாங்க, கானா பாடல்களையும் பரப்புறாங்க. இதுதான் இந்தப் படத்துடைய கதை.

அதுல முதல் தலைமுறையில ஆதிதான் நடிச்சிருக்காரு. அதுவும் ஆதி, இரண்டாவது தலைமுறையும் ஆதி, மூணாவது தலைமுறையும் ஆதி. மூன்று கேரக்டர், மூன்று விதமான கெட்டப்புகள். ரொம்ப அழகா பண்ணியிருக்காரு ஆதி.

அந்த முதல் தலைமுறையில அவருக்கு ஜோடி சைத்ரா ஜே. ஆச்சார். அதுல எப்படியாவது அந்தக் கானா பாடல்கள் மேல கொண்டு வரணும் அப்படின்னு சொல்லி அவரு அவ்வளவு போராட்டம் போராடி இருக்காரு. ஆனா ஒவ்வொரு முறையும் அவரு போராடும் பொழுதும் ஏதோ ஒரு பிரச்சனை வந்து அவரை கீழ தள்ளிவிட்டு அவருடைய முயற்சிகளைத் தோற்கடிச்சிருச்சு.

அதற்கு அடுத்த தலைமுறை வந்து எப்படியும் நம்ம ஜெயிச்சிடுவோம் அப்படின்னு சொல்லி காலேஜ் டேஸ்ல இருந்து போராடிக்கிட்டு இருக்காரு. அவருக்கு ஒரு எதிர்பாராத ஒரு காதல். ஒரு மிகப்பெரிய கர்நாடக சங்கீத வித்வானின் மகளை கல்யாணம் பண்ணி, அதன் மூலமாகவும் அவரு ரேடியோல பேசுறதுக்காகவும், அவரு ரேடியோல பாடி தன்னுடைய கானா பாடலை புகழ் பெறுவதற்காக ட்ரை பண்றாரு. ஆனா அதுலயும் எதிர்பாராத விதமா அவருடைய மனைவி திடீரென்று இறந்துவிட்டதால் தன்னுடைய கானா பாடல் அந்த லைனையே மறந்துட்டு விட்டுட்டு ஒரு சாதாரண பஸ் கண்டக்டரா, டிரைவர்… டிரைவர் வேலைக்குப் போயிடுறாரு. அதனால அந்தக் கனவு அவருக்கு போயிருச்சு.

இப்ப இருக்கிற இந்த மூணாவது பேரன் என்ன பண்றாரு, தன்னுடைய கல்லூரியில் தன்னை எங்கெங்கே இடம் கிடைக்குதோ அங்கெல்லாம் தன்னுடைய கானா பாடல்களை பாடிப் பாடிப் பாடி புகழ் பெற்றுக் கொண்டிருக்காரு. அவருடைய வாழ்க்கைக் கதையிலும் இதே மாதிரி ஒரு பிரச்சினைகள் வரும்பொழுது, குறுக்க வரும்போது அவருடைய முன்னாள்… முந்தைய தலைமுறை கதை எல்லாம் அவருக்குச் சொல்லப்பட்டு ‘எப்படியும் நான் ஜெயிச்சிருவேன்’ அப்படின்னு சொல்லிட்டு கடைசியா ஒரு இடத்தில் ஜெயித்துக் காட்டுறாரு. கானா பாடல்களையும் மக்கள் ரசிக்கிறாங்க.

இது ஒரு ஒதுக்கப்பட வேண்டிய இசை அல்ல; பாராட்டப்பட வேண்டிய இசை, பாடப்பட வேண்டிய இசை. அனைத்துத் தரப்பு மக்களும் இதைப் பாடணும். இது வந்து ஆபாசம் கிடையாது. இதில் பாடப்படுகின்ற வரிகள் எளிய வரிகள், இசை அதிகமாக இருக்கும் அப்படிங்கிற அந்த வித்தியாசத்தை அழகா அவரு சொல்றாரு இப்ப இருக்கிற ஆதி. அது மாதிரியே ஜெயிச்சும் காட்டுறாரு. அதை எப்படி ஜெயிக்கிறார் அப்படிங்கறதுதான் அந்த கடைசி ஒரு மணி நேரம் அந்த சீன். ரொம்ப அழகான ஒரு படமா அதை எடுத்திருக்காரு ஆதி, அதுல எந்த சந்தேகமும் இல்லை.

அது முதல் இரண்டு கதைகளையும் சொல்லும் பொழுதும் அது கொஞ்சம் சோகமயமாக இருந்து நம் மனதை இடம்பெடிப்பது போல கதையை மாத்தி இருக்காரு. படத்துல ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, டயலாக்… வளவள வளவளன்னு எல்லாருமே பேசிக்கிட்டே இருக்காங்க. எல்லாருமே டயலாக் பேசிக்கிட்டு இருக்காங்க. டயலாக் திடீர் திடீர்னு கொஞ்சம் நகைச்சுவையா இருக்கட்டும் அப்படிங்கறதுக்காக கவுண்டர் அட்டாக் போடுறெல்லாம் டயலாக் எல்லாம் வந்துடுது. ஒரு அளவுக்கு மேல நமக்குத் தாங்க முடியல.

அதே மாதிரி பாடல்களும் அதிகம். கிட்டத்தட்ட 11 பாடல்கள் இருக்கிற மாதிரி இருக்கு. ஒரு சில பாடல்கள் நம்மளக் கேட்டு எந்திரிச்சு டான்ஸ் ஆட வைக்கிற மாதிரியான பாடல்கள். ஆனா அதுவும் சில நேரங்களில் நமக்குக் கொஞ்சம் அது எப்படிடா வந்துருச்சோ அப்படின்னு நினைக்க வைக்கிற அளவுக்கு வந்துருச்சு. ஆனாலும் இது எல்லாத்தையும் சமாளிக்க… இது எல்லாத்தையும் தாங்கிக்கக்கூடிய சக்தியை ஆதி கொடுத்திருக்காரு. அவருடைய அருமையான, மேன்மையான நடிப்பு. அவருடைய உடன் நடித்த நடிகர், நடிகைகளும் அழகழகாக நடிச்சிருக்காங்க, நடிக்க வைக்கப்பட்டிருக்காங்க.

அந்த வகையில் இந்தப் படம் ஒரு கானா பாடல்கள் அப்படின்னு இல்ல, ஒரு எளிய ஒரு தலைமுறையினர் தங்களுக்குத் தெரிஞ்ச ஒன்னை தெரியாத மத்தவங்ககிட்ட சொல்றதுக்காக வர்றாங்க. அவங்களுக்கு யாராவது மேடை போட்டுக் கொடுங்க அப்படின்னு அவங்க கேக்குறாங்க. அது ஒரு கேள்விக்கான ஆதங்கம்தான் இந்தப் படம். அந்தக் கேள்வி எழுப்பிருக்காங்க. அதுக்கு நம்ம பதில் சொல்லணும் அப்படிங்கறதுதான் ஒரு பொறுப்பும் மக்களுக்கு உண்டு, ரசிகர்களுக்கும் உண்டு அப்படிங்கிறாங்க.

அந்தக் கானா பாடல்களை இப்போது லேட்டஸ்ட்டா 90களில் தேவாதான் ஆரம்பிச்சு வைச்சார் தமிழ் சினிமால. அவர்தான் ஆரம்பிச்சு வைச்சு அவருடைய ஒவ்வொரு பாடல்களிலும் கானா பாடல்கள் ஒலித்தன. ஆனால் அதுவும் காதல் சோகப் பாடல்களாக ஒலித்ததினால கொஞ்சம் சந்தோஷமான பாடல்களும் இருந்ததுனால கானா பாடல்கள் சினிமாவுக்கு வந்த பின்னாடிதான் நிறைய பிரபலமாச்சு. இப்போது வடசென்னை முழுவதும் கானா பாடல்கள் அதிகம் நிரம்பி இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பாடுவதற்கான குழுக்களே வடசென்னையில் ரொம்ப ரொம்ப அதிகம், தெருவுக்குத் தெரு இருக்காங்க. அடிக்கடி அங்க பாட்டிசை நடத்திட்டு இருக்காங்க. ஆனா அந்தப் பாடல்கள் சாவுக்குக் கூட பயன்படுத்துறாங்க. சாவுக்குப் பயன்படுத்தக்கூடிய அந்தப் பாடல்கள் கூட கேட்கும் விதமாகவே இருக்கும். சுடுகாட்டுல நிறைய கேட்டிருப்போம்.

ஆக, அந்த அளவுக்கு ஒரு நல்ல ஒரு மியூசிக்கல் மூவியாக அந்தப் படத்தை எடுத்திருக்காரு ஆதி. அவருடைய நடிப்பும் ரொம்பவும் அபாரம்னு சொல்ல முடியாது; ஆனா அதே சமயம் படத்து கதைக்கேற்ப, திரைக்கதைக்கேற்ப, அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ப தன்னுடைய நடிப்பைக் கொடுத்திருக்காரு. மூன்று தலைமுறை ஆதியையுமே நல்லா ரசிக்க முடிஞ்சிருக்கு. அதுலயும் இடையில் கடைசியா பேரன் ஆதிதான் ரொம்ப அதிகமான காட்சிகளில் நடித்து மனதில் இடம் பிடிச்சிருக்காரு.

அப்புறம் நடிகைகள்ல மூன்று பேரு: சைத்ரா ஆச்சார் முதல் பாட்டி கேரக்டர். அந்தப் பொண்ணும் சிறப்பா நடிச்சிருக்காங்க. அவங்களுடைய டான்ஸ் எல்லாம் சிறப்பா ஆடிருக்காங்க. அப்புறம் அடுத்து ரம்யா ரங்கநாதன், அவங்களை கொஞ்சம் அழகா காட்டணுங்கிறதுக்காக ரொம்ப ரொம்ப அழகான வியூஸ் எல்லாம் வச்சு, ரொம்ப ரொம்ப அழகான கேமரா கோணமெல்லாம் வச்சு அவங்களை அழகுபடுத்தி இருக்காங்க. கடைசியா அவருடைய மரணக் காட்சி நமக்கு ரொம்பவும் சோதனை… ரொம்பவும் அய்யய்யோ அப்படின்ற மாதிரி ஒரு ஃபீலிங்க கொடுத்தது. அந்த அளவுக்கு அழகா படமாக்கிருக்காங்க. அவங்க ஒரு உத்வேகம் கொடுக்கிறாங்க ரம்யா ரங்கநாதன் அந்த இரண்டாவது அப்பா கேரக்டருக்கு. ரொம்ப அழகான காட்சிகள் அதெல்லாம். ஒரு மோட்டிவேஷன் குடுக்குறாங்க இல்ல. ‘நீ இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு இல்ல, நீ எப்படி இருந்தாலும் கானா… முயற்சிகளைத் தளரந்துவிடக்கூடாது’ அப்படிங்கறதுக்காக அவங்க நிறைய சொல்றாங்க. அதெல்லாம் ரொம்ப ஒரு அருமையான காட்சிகள் அதுல. அந்த காட்சிகளில் அவங்களுடைய ரம்யா ரங்கநாதனின் நடிப்பும் சூப்பர் அப்படின்னு சொல்லலாம்.

கடைசியா கேத்திகா சர்மா, அவங்க இப்போதைய கலாச்சாரத்திற்கு ஏற்ப அவங்க ஒரு கொள்கை முடிவு எடுத்திருக்காங்க. இவங்க லவ் பண்ணாலும் ‘நானும் இன்னொரு பொண்ணைத்தான் லவ் பண்றேன்’ இந்த மாதிரி லெஸ்பியன் காட்சியை காட்டிட்டு, அது தேவையில்லாத கேரக்டர் ஸ்கெட்ச், அதை எதுக்கு இதுல வச்சாருன்னு தெரியல. அது கடைசியா அவங்க ரெண்டு பேரும் மறுபடியும் ‘அந்தப் பொண்ணு இல்லை, நான் இவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்’ன்ற மாதிரி மனம் திருந்தி வர்ற மாதிரியும் வைத்திருக்காங்க. அதுக்கு ஒரு அழுத்தமான காரணம் இல்லை. இருந்தாலும் கடைசியில் பேரனுக்கு ஏதாவது ஒரு ஜோடியை சேர்த்து வைக்கணும்ல, அதனால சேர்த்து வச்சிருக்காங்க போல இருக்கு.

அதைத்தவிர இவர்கூட கூடவே ஒருத்தர் இருக்காரு ஹர்ஷத் கான் அப்படிங்கிற ஒரு புதுமுக நடிகர், அருமையா நடிச்சிருக்காரு. படம் முழுக்கப் பேசிப் பேசிப் பேசியே நம்மள டயர்ட் ஆக்குனதுல பெரும்பங்கு இந்த ஹர்ஷத் கானுக்குத்தான் உண்டு.

அப்புறம் இவரு நாசர் சார், இப்ப தாத்தாவா நடிச்சிருக்காரு. அப்புறம் பகவதி பெருமாள், அவரு ஒரு சினிமா புரொடக்ஷன் மேனேஜரா நடிச்சிருக்காரு. அப்புறம் சஞ்சய், சபரீஸ் அப்படி பல கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அப்புறம் யூடியூப் நட்சத்திரங்கள் அத்தனை பேருமே வரிசையா இருந்து நடிச்சிருக்காங்க. அப்பாவா நடிச்ச பாபா பாஸ்கர் அவரையும் ஒரு பக்கம் நல்ல டான்ஸ் மாஸ்டர் தவிர கண்டிப்பா ஒரு நல்ல குணச்சித்திர வேடத்துல நடிச்சு தன்னுடைய பெயரைப் பதிவு பண்ணியிருக்காரு. அவருக்கு நமது பாராட்டுக்கள்.

தாத்தாவாக நடிச்ச கருணாஸ் கடைசியா வர்றாரு. அவரு வந்து அவர்தான் பிளாஷ்பேக் கதையெல்லாம் எடுத்துவிட்டு, அந்த குடும்பத்துல இதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு அப்படிங்கறத காட்டுறாங்க. கருணாஸின் அழுத்தமான ஒரு குணச்சித்திர, அமைதியான நடிப்பும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய பக்கபலமாக அமைஞ்சிருக்கு.

அதுக்கப்புறம் அந்தத் தொழில்நுட்பம்னு பார்த்தா ஒளிப்பதிவுதான். பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு அந்த வடசென்னை பகுதியை வளைச்சு வளைச்சு தீட்டியிருக்காங்க. அதுலயும் சில அந்த வீடுகள் பகுதிகள் எல்லாம் காட்டும் பொழுது ரொம்ப அழகு. இதெல்லாம் எங்க போய் நாம தேடிக் கண்டுபிடிக்கிறது அப்படின்னு நமக்கு தோணுது, அவ்வளவு அழகா காட்டியிருக்காங்க. கலை இயக்குனர் அழகா வடிவமைச்சுருக்காரு அதை.

அப்புறம் அந்த ஒளிப்பதிவுல பாடல் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறதெல்லாம் சூப்பர். அவ்வளவு அழகா எப்படித்தான் அந்த கேமராவை கையில தூக்கிட்டு கூட்டத்துக்குள்ள சுத்து சுத்துன்னு சுத்துனாரோ தெரியல. உண்மை அதுக்காகவே அந்த ஒளிப்பதிவாளருக்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.

அப்புறம் இசை வந்து இவரேதான் பண்ணியிருக்காரு ஹிப்ஹாப் ஆதி. கிட்டத்தட்ட 11, 12 பாட்டு இருக்கும். அதுல ஒரு நாலஞ்சு பாட்டு நம்ம கேட்கிற அளவுக்கு நம்மள்கூட சேர்ந்து பாடுற அளவுக்கு ஒரு நல்லா இருக்கு. இன்னும் நாலஞ்சு பாட்டு அடிச்சு ஆடுற மாதிரி, கேட்டவுடனே எந்திரிச்சு ஆடுற மாதிரியான பாட்டு. இந்த கால இளைஞர்களுக்குப் பிடித்தமாக இருக்கும்.

பென்னி ஆலிவர் அழகான எடிட்டிங் பண்ணியிருக்காரு. முந்தைய கதை, பிந்தைய கதை, இப்ப நடக்குற கதை என்று மாறி மாறி கதைகள் வர்றதுனால அது எதுவும் நமக்குக் குழப்பம் வராத அளவுக்கு ஒரு அழகான கதையா நமக்குத் தொகுத்துக் கொடுத்திருக்காரு.

கலை இயக்குனர், காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி மூணு தலைமுறை அந்த டிரஸ்ஸை எப்படி அழகா போடுவாங்களோ அதே மாதிரி அழகா வடிவமைச்சுக் கொடுத்திருக்காங்க. டிரஸ்ஸிங் சூப்பர் இந்தப் படத்துல, உண்மையிலேயே பாராட்டணும்.

ஒரு “மீசைய முறுக்கு” முதல் பாகம் மாதிரியே ஒரு பையன் வளர்ந்து வர்றான் மேல. அவனை வளர்ந்து வரும்போது அவனுடைய சாதிப் பிரச்சனையோ அல்லது அவனுடைய திறமை இல்லை அப்படின்றத காட்டியோ அவனைத் தடுக்க வேண்டாம். ‘கானா’ அப்படிங்கறது ஒரு நல்ல… அதுவும் ஒரு இசையில் ஒரு அங்கம், தமிழ் இசையில் அது ஒரு அங்கம் அப்படின்னு இயக்குனர் ஆதி சொல்றாரு. அதனால யாரையும் அவமானப்படுத்தாம அந்த இசையையும் கொஞ்சம் எடுத்து நீங்க எங்களையும் உயர்த்தி விடுங்க அப்படின்னு இந்தப் படத்தின் மூலமா சொல்லியிருக்காரு.

அவர் சொல்ல வந்த கருத்தும் கரெக்ட், சொல்லிய விதமும் கரெக்ட். ஆனால் கானா பாடல்கள் தமிழகம் முழுவதும் வரணும் அப்படின்றது மதுரைக்கு வரணும், திண்டுக்கல்லுக்கு வரணும், திருச்சிக்கு போகணும், அங்கேயும் போகணும், எல்லா இடத்துக்கும் போகணும், வடசென்னையில மட்டுமே இருக்கக் கூடாது அப்படின்னா அந்த மக்கள் எல்லா ஊர்லயும் கலந்து இருந்து இருந்தா அந்தப் பாடல்கள் ரீச் ஆயிருக்கும். ஒரு பகுதி மட்டுமே ரீச் ஆகுது. அதாவது சென்னையில மட்டுமே கூவம் பாஷைன்னு ஒண்ணு பேசுவாங்க. அது வந்து வேற எங்கயுமே பேச முடியாது, மக்களுக்குத் தெரியாது. ரெகுலரா பேச முடியாது, சினிமால மட்டும்தான் பார்த்திருக்கோம். அது மாதிரியான ஒரு இசைதான் கானா அப்படிங்கறதும். அதனால இது இனிமேல் மக்கள்ட்ட மேல வர்றதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்.

அதே சமயம் புதிதாக வருகின்ற இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் அப்படிங்கிறது அது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவர்களைப் பொறுத்தது. அது ஒரு சிலர் எனக்கு வேண்டாம் அப்படிம்பாங்க, ஒரு சிலர் வேணும்னுவாங்க. அதனால் அவரவர்கள் கதை, அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அதை நம்ம கட்டாயப்படுத்தக் கூடாது அப்படிங்கறதும் இயக்குனருக்கு நாம் சொல்லிக்கிறோம்.

மற்றபடி ஒரு சினிமாவாகப் பார்க்கப்போனால் இந்தப் படம் ஒரு சிறந்த படைப்பாக உருவாகி இருக்கிறது. என்ன, அந்த காது இரைச்சல், அதிகமான சவுண்டு அதை இதெல்லாம் கொஞ்சம் குறைச்சிருந்தா நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி ஹிப்ஹாப் ஆதிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

RATING : 3.5 / 5

Our Score