full screen background image

“ROOT–Running Out of Time” படத்தின் முதல் பார்வையை இயக்குநர் A.R.முருகதாஸ் வெளியிட்டார்

“ROOT–Running Out of Time” படத்தின் முதல் பார்வையை இயக்குநர் A.R.முருகதாஸ் வெளியிட்டார்
“ROOT – Running Out of Time” படக் குழு, நடிகர் அபர்ஷக்தி குரானாவின் கண்கவர் புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
 
இந்த லுக்கை புகழ்பெற்ற இயக்குநர் A.R. முருகதாஸ், ஜனவரி 26 அன்று தனது சமூக ஊடக தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
 
எஸ்.சூரிய பிரதாப் எழுதி, இயக்கியுள்ள இந்த ‘ROOT – Running Out of Time’ ஒரு அறிவியல்-கிரைம் திரில்லர் திரைப்படமாகும்.
 
வெரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஷேக் முஜீப், ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் ஷங்கர் மற்றும் தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில் கௌதம் ராம் கார்த்திக், அபர்ஷக்தி குரானா, நரேன், பவ்யா திரிகா, Y.G. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா, தொகுப்பு – ஜான் அபிரகாம், இசை – அரன் ரே, CEO – டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சல், சண்டை வடிவமைப்பு – மிராக்கிள் மைக்கேல், கலை இயக்கம் – ஜகன் நந்தகோபால், VFX – சாந்தகுமார் (ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோஸ்), உடை வடிவமைப்பு – தீப்தி RJ, பிரொடக்ஷன் கண்ட்ரோலர் – தனலிங்கம், DI – பிரசாத் ஸ்டூடியோஸ், நிறமமைப்பு – ரங்கா,  ஒலி வடிவமைப்பு – ஆனந்த் ராமச்சந்திரன், Publicity வடிவமைப்பு – தினேஷ் அசோக், பத்திரிக்கை  தொடர்பு – ரேகா, டிஜிட்டல் விளம்பரம் – Digitally Powerful.
 
‘தங்கல்’, ‘ஸ்த்ரீ’, ‘பதி பத்னி அவுர் வோ’, ‘ஸ்த்ரீ 2’ போன்ற பாராட்டப்பட்ட திரைப்படங்களில் தனது அழுத்தமான துணை வேடங்களாலும், ‘ஜூபிலி’ என்ற Web  தொடரில் முதன்மை நடிப்பாலும் பரவலாக அறியப்படும் அபர்ஷக்தி குரானா,  ROOT – Running Out of Time மூலம் அவர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைப்பது, அவரது கதாபாத்திரம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பெரிதும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமாகும் அபர்ஷக்தி குரானா, மர்மம், அச்சுறுத்தல் மற்றும் இயல்பான உள்ளுணர்வு ஆகியவற்றால் நிரம்பிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
பர்ஸ்ட் லுக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய காட்சி, திரையில் தோன்றுவதைக் காட்டிலும், பயமுறுத்தும் தன்மையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் படத்தின் இருண்ட கதை அடுக்குகளுக்கான சாயலை இது உருவாக்குகிறது.

இந்த லுக் சமூக ஊடகங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும், இதில் வெளிப்பட்ட தீவிரமும் மாற்றமும் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக பாராட்டினர்.

இதற்கு முன்பு, படத்தின் முதல் லுக்—நாயகனாக கௌதம் ராம் கார்த்திக் இடம் பெற்ற தோற்றம்—ஜனவரி 1 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்டு, பெரும் கவனத்தையும் வலுவான வரவேற்பையும் பெற்றது.

பரபரப்பான திரில்லும், உணர்ச்சி மிகுந்த கதை சொல்லலும் இணைந்த ஒரு பிடிப்பான அனுபவத்தை காண்பதற்கு படம் உறுதி அளிக்கிறது.

சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் விரிவாக படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தற்போது முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து, போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளில் உள்ளது.

A.R. முருகதாஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த வெளியீடு, ROOT – Running Out of Time படத்திற்கு மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்து, படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஆவலையும் அதிகரித்துள்ளது.

 
Director A.R. Murugadoss Launches Aparshakti Khurana’s Powerful Look from “ROOT – Running Out of Time”

The makers of ROOT – Running Out of Time unveiled a striking new look of Aparshakti Khurana, officially launched by acclaimed filmmaker A.R. Murugadoss on January 26 through his social media platform.

Marking his Tamil cinema debut, Aparshakti Khurana essays a pivotal character steeped in mystery, menace, and raw instinct. The newly released visual offers a compelling glimpse into a persona that doesn’t merely appear on screen, but makes an intimidating arrival—setting the tone for the film’s darker narrative layers.

The look received an encouraging response across social media, with audiences and cinema enthusiasts praising the intensity and striking transformation showcased in the reveal.

Aparshakti Khurana is well known for his impactful supporting performances in acclaimed films such as Dangal, Stree, Pati Patni Aur Woh, and Stree 2, and for his widely appreciated starring role in the drama series Jubilee. His entry into Tamil cinema with ROOT – Running Out of Time has significantly heightened curiosity and expectations surrounding his character.

Earlier, the first look of the film featuring Gautham Ram Karthik in the lead was launched by Superstar Rajinikanth on January 1, garnering widespread attention and creating strong buzz around the project.

Written and directed by Sooriyaprathap S, ROOT – Running Out of Time is a sci-fi crime thriller produced by Shaik Mujeeb, RajaRajan Gnanasambandam, Sanjai Shankar, and Dhanishtan Fernando under the Verus Productions banner. The film promises a gripping blend of edge-of-the-seat thrills and emotionally charged storytelling.

The cast includes Gautham Ram Karthik, Aparshakti Khurana, Narain, Bhavya Trikha, Y. Gee. Mahendra, Pavni Reddy, Linga, RJ Anandhi, and others in key roles.

Shot extensively across Chennai and multiple locations, the film has completed its shoot and is currently in the post-production phase.

Cinematography – Arjun Raja, Editing – John Abraham, Music – Aran Ray, CEO – Dr. D. Alice Angel, Action Choreography – Miracle Michael, Production Designer – Jagan Nandhagopal, VFX – Santhakumar (Hocus Pocus Studios), Costume Design – Deepthi RJ, Production Controller – Dhanalingam, DI – Prasad Studios, Colorist – Ranga, Sound Designer – Anand Ramachandran, Publicity Designer – Dinesh Ashok, Public Relations – Rekha, Digital Promotions – Digitally Powerful.

The launch by A.R. Murugadoss marks yet another significant milestone for ROOT – Running Out of Time, further elevating expectations and anticipation surrounding the film.

Our Score