full screen background image

மாய பிம்பம் – சினிமா விமர்சனம்

மாய பிம்பம் – சினிமா விமர்சனம்

Self Start Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான K.J.சுரேந்தர் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாய பிம்பம்’.

இந்த ‘மாய பிம்பம்’ படத்தில் ஆகாஷ், ஹரி ருத்ரன், ஜானகி, ராஜேஷ் பாலா, அருண் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். வினோத் சிவக்குமார் படத் தொகுப்பு செய்ய, மார்ட்டின் டைடஸ் கலை இயக்கம் செய்துள்ளார்.

ஒரு வருடத்தில் எப்பவோ ஒருமுறைதான் ஒரு சில திரைப்படங்கள் அந்த வருடத்தின் முக்கியமான திரைப்படமாக இடம் பெறும். அந்த வகையில் இந்த 2026 வருடத்தின் முதல் குறிப்பிடத்தக்க படமாக வந்திருக்கிறது இந்த மாய பிம்பம் திரைப்படம்.

இன்றைய இளைஞர்களின் பல்சை பிடித்துப் பார்க்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இத்திரைப்படம் உண்மையில் 2018-ம் ஆண்டு தயாராகி அப்பொழுதே சென்சார் பெறப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து இத்திரைப்படம் திரைக்கு வந்திருப்பதே மிகப் பெரிய சாதனைதான்.

மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ் தன்னுடைய நண்பர்கள் ராஜேஷ் அருண்குமார், ஹரிருத்ரன் ஆகியோருடன் நெருங்கிய நட்பிலும் இருக்கிறார். இவர்களில் ஹரிருத்ரன் கொஞ்சம் வித்தியாசமான இளைஞர்.

காம விளையாட்டில் கை தேர்ந்தவன் இந்த ஹரிருத்ரன். எந்தப் பெண்ணை பார்த்தாலும், அந்தப் பெண் உடனடியாக செக்ஸுக்கு வந்து விடுவாரா என்பதை பார்வையாலே கண்டுபிடித்து விடும் அளவுக்கு ஆற்றல்மிக்கவர்.

அதேபோல் ஆன்ட்டிகளின் காதலன். இந்தப் பெண் திருமணத்திற்கு வருவாரா.. இந்த பெண் காதலிக்க ஒத்துக் கொள்வாரா… என்பதையெல்லாம் உடனுக்குடன் சொல்லக் கூடிய ஒரு காதல் ஜோதிடர்.

இந்த நேரத்தில் ஒரு விபத்தில் அடிபட்டு மருத்துவமனைக்கு வருகிறார் ஹீரோ. அவருடைய கண் பார்வையில் பேருந்தில் வரும் பொழுது பார்த்துவிட்ட ஒரு அழகிதான் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஜானகி.

அந்த ஜானகி ஹீரோ இது காதலாக இருக்கிறார் என்பதை ஹரி ருத்ரன் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஆனால் ஹீரோவுக்கு அதை நம்புவதற்கு தயக்கமாக இருக்கிறது. ஆனால் ஹீரோயினோ ஹரிருத்ரன் சொல்லுகின்ற திரைக்கதையில் அவ்வப்பொழுது வந்து வந்து ஹீரோவை பார்த்துவிட்டும் போகிறார்.

ஜானகியின் அம்மா தன் வீட்டிலேயே பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண். அவருடைய மகளும் அவரை மாதிரியே இருப்பாரோ என்று நினைத்து ஹரி தன் நண்பன் ஆகாஷுக்கு ஒரு கெட்ட வழியை கை காட்டுகிறார்.

அந்த கெட்ட வழியை செய்ய போய் ஹீரோவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கிடைக்கிறது. ஹீரோ செய்த அந்த கெட்ட வழி என்ன? அதனால் அவருக்கு வந்த பிரச்சனைகள்தான் என்ன? ஜானகியும் ஹீரோவும் திருமணம் செய்து கொண்டார்களா?.. இல்லையா?.. அவர்களின் காதல் ஜெயித்ததா?.. இல்லையா?.. இதுதான் இந்த ‘மாய பிம்பம்’ என்ற படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்டே சுமதியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜானகிதான். அவருடைய கண்களே பல கதைகளைப் பேசுகிறது. இயக்குர் சிறப்பாக இயக்கி இருப்பதால் இவருடைய நடிப்பு திறமை முதல் படத்திலேயே மிக அழகாக வந்திருக்கிறது.

ஹீரோவின் அத்துமீறலை பார்த்து கடும் அதிர்ச்சியில் அவருடைய முகத்தை பார்த்துக் கொண்டே அறையில் இருந்து வெளியேறும் பொழுது அவருடைய முகம் காட்டுகின்ற நடிப்பு, கை தட்டவே வைத்துவிட்டது.

தன்னுடைய காதலைப் புரிந்து கொள்ளாமல் நாயகன் செய்த அத்துமீறலைப் பார்த்து,எவ்வளவு நம்பினேன் உன்னை.. இப்படி செய்துவிட்டாயே?” என்பதுபோல அவர் பார்க்கின்ற அந்த ஒற்றை பார்வையை படத்தின் கதையை ஹீரோவிடம் இருந்து ஹீரோயினுக்கு இடம் மாற்றிவிட்டது.

நாயகனாக நடித்திருக்கும் ஆகாஷ் அவரும் தன்னுடைய பங்குக்கு மிக சிறப்பான ஒரு இயல்பான நடிப்பையே காண்பித்து இருக்கிறார். நண்பர்கள் சொல்லுகின்ற கதையை நம்புவதா.. வேண்டாமா.. என்கிற அந்த குழப்பத்தை அவ்வப்பொழுது அவர் தன்னுடைய வசனம் மூலமாகவும். நடிப்பும் மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இறுதி காட்சியில் அவருடைய புலம்பலும், அதிர்ச்சியும், வேதனையும் அப்படியே நம்மையும் தாக்கியிருக்கிறது. சேது படத்தின் கிளைமாக்ஸ்போல அமைந்திருக்கும் அந்தக் காட்சி இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பூஸ்டர் என்று சொல்லலாம்.

இவருடைய நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் மூவருமே புதுமுகங்கள் என்றாலும் அது தெரியாத வண்ணமே இயல்பாக நடித்திருக்கிறார்கள், நம்மாலும் அவர்களை ரசிக்க முடிந்திருக்கிறது., அண்ணன், அண்ணியாக நடித்த அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படி ஒரு அப்பாவும், ம்மாவும், அண்ணனும், அண்ணியும் கிடைத்தால் அந்த வீடு நிச்சயம் சொர்க்கமாகத்தான் இருந்திருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவருடைய அப்பாவாக நடித்தவரின் அந்த கள்ளக் கபடம் இல்லாத குணம்… ப்படி ஒரு அப்பா நமக்கு கிடைத்திருக்கக் கூடாதா என்றெல்லாம் ஏங்க வைத்திருக்கிறது.

கடலூர், சிதம்பரம் என்ற இரண்டு நகரங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் பாதி கடலூரையும், பாதி சிதம்பரத்தையும்,வைகளை இணைக்கும் சாலையையும் வேகமாக கடந்துள்ளது. அதை அழகாக படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு என்றே சொல்லலாம்.

நந்தாவின் இசையில் பாடல்கள் மிக எளிமையான தமிழில் நம் காதுகளில் நுழையும் பொழுது கேட்பதற்கே அழகாக இருந்தது. பின்னணி இசையிலும் பல இடங்களில் இசையை மௌனித்து கதைக்குள் நம்மை ஆழத் தள்ளி இருக்கிறார் இசையமைப்பாளர் நந்தா.

புதுமையான இயக்கம், நடிகர்களின் அளவான நடிப்பு, திரைக்கதையின் மெதுவான ஓட்டம்… இதை அப்படியே முதலிலிருந்து கடைசிவரையிலும் கொண்டு வந்து செதுக்கியிருக்கிறார் படத் தொகுப்பாளார் வினோத் சிவகுமார்.

காதலும், காமமும் ஒன்றாகத்தான் இருக்கும். அதுவும் இப்போதைய புதிய தலைமுறையினர் முதலில் காமம், பின்பு காதல் என்றுதான் இருக்கிறார்கள். இதை மீறுவதால் ஏற்படுகின்ற சட்ட விரோத செயல்களும், கொடுமைகளும் இன்றைக்கும் சமூகத்தில் மிகப் பெரிய பிரச்சனையை எழுப்பி வருகின்றன. அப்படி ஒரு கதையை வைத்துக் கொண்டுதான் இயக்குர் நமக்குப் பாடம் எடுத்திருக்கிறார்.

எதற்கு காதலிக்க வேண்டும்? ஏன் திருமணம் செய்ய வேண்டும்? என்கின்ற இந்த இரண்டு கேள்விகளுக்கு இப்போதுவரையிலும் மிகச் சரியான பதிலை.. இளைஞர்களுக்கு புரியும் வகையில் யாரும் சொல்லவில்லை.

இந்த இயக்குநர் கொஞ்சம் வசனங்களில் நேர்த்தியை கொண்டு வந்து வெளிப்படையாக சொல்லி ஒரு அறிவுரையை கொடுத்திருக்கலாம். ஆனால், தன்னுடைய காதலை காவியமாக உருவாக்கி வைத்திருப்பதாலும் ஒரு அழகியல் கவிதையாக கொடுத்திருப்பதாலும் அது நமக்கு கிட்டவில்லை.

ஆனால், இந்தப் படம் புதிய காதலர்களுக்கும், காதலிகளுக்கும் ஒரு புதிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

RATING : 3.5 / 5

Our Score