திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படம் இப்போதே ரசிகர்களிடம் நல்ல பஸ்ஸை கிளப்ப ஆரம்பிச்சுடுச்சு.
அந்த படத்துல முக்கியமான ரோலில் சாண்டி மாஸ்டர் சேர்ந்திருக்கார்னு அதிகாரப்பூர்வமாக அறிவிச்சுட்டாங்க. இதை உறுதி பண்ணுற மாதிரி ஒரு ஸ்டைலான போஸ்டர், அதோட ஒரு ஜாலியான அறிவிப்பு வீடியோவும் வெளியிட்டிருக்காங்க.
பிக்பாஸ் காலத்திலிருந்தே கவினும் சாண்டியும் சேரும்போது ஸ்க்ரீன்ல ஒரு ஸ்பெஷல் எனர்ஜி தெரியும். நட்பு, கலகலம், டைமிங் காமெடி – எல்லாமே செம்மா வொர்க் ஆகும். அந்த கூட்டணி திரும்ப ஒரே படத்துல வர்றதுனால, ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம்தான்.
“Boys Are Back”ன்னு சொல்லுற மாதிரி, மாடர்ன் லுக்குல வாயில வெடியை வைத்துக்கிட்டு கவின் – சாண்டி போஸ்டர் ரிலீஸ் ஆனதும் சோஷியல் மீடியாவுல செம்ம ட்ரெண்ட். அதுக்குப் பிறகு வந்த அறிவிப்பு வீடியோ இன்னும் இன்டரஸ்ட்டா இருக்கு. ஒரு ஆபிஸ் செட்டப்… எல்லாம் சிதறிக் கிடக்குது… கேமரா சுத்தி வரும்போது நாற்காலியில அமைதியா உட்கார்ந்திருக்கும் பிரியங்கா மோகன் என்ட்ரி… கடைசில போஸ்டர்ல பார்த்த அதே ஸ்டைலுல கவின் – சாண்டி சேர்ந்து ஃபிரேம்ல வர்றாங்க. வீடியோ முழுக்க லைட்டான கலகலப்போட முடிஞ்சுடுது.
இந்த வீடியோவை ரசிகர்கள் எல்லாம் ஷேர் பண்ணி, “செம்ம காம்போ”, “திரும்ப Boys Team”ன்னு கமெண்ட்ஸ்ல கொண்டாடிட்டு இருக்காங்க.
இந்த படத்துக்கு OFRO மியூசிக். ஃபேண்டஸி, ரொமான்ஸ், காமெடி எல்லாம் கலந்த ஒரு எண்டர்டெயினர். திங்க் ஸ்டுடியோஸ் சார்புல ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். இயக்கம் – கென் ராய்சன்.
கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையா சேர்றதே ஒரு பக்கம் ஹைப் கொடுத்துட்டிருந்த நிலையில், இப்போ சாண்டி மாஸ்டரும் சேர்ந்ததால எதிர்பார்ப்பு இன்னும் லெவல் அப்டேட் ஆயிடுச்சு. மொத்தத்துல சொன்னா, ஜாலியான, கலகலப்பான ஒரு படம் வரப் போகுது என்பதில் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

The Kavin–Priyanka Mohan film produced by Think Studios has already started creating a good buzz among fans. It has now been officially announced that Sandy Master has joined the project in a key role. To confirm this, the team released a stylish poster along with a fun announcement video.
From their Bigg Boss days, the Kavin–Sandy combo has always had a special on-screen energy. Their friendship, humour, timing, and lively chemistry have consistently won over audiences. So, seeing this successful pair reunite in the same film has doubled the excitement for fans.
The poster, where Kavin and Sandy appear in a modern look with a cracker in their mouths and the tagline “Boys Are Back,” quickly went viral on social media. Following that, the announcement video grabbed even more attention. Set in a messy office environment, the camera slowly moves around to reveal Priyanka Mohan calmly seated on a chair. In the final frame, Kavin and Sandy appear together in the same stylish look seen in the poster, wrapping up the video on a light and entertaining note.
Fans are actively sharing the video on social media, celebrating the reunion with comments like “Super combo” and “The boys are back.”
The film’s music is composed by OFRO. It is a fantasy-romantic-comedy entertainer produced by Swaroop Reddy under the Think Studios banner and directed by Ken Royson.
While the first-time pairing of Kavin and Priyanka Mohan had already created strong anticipation, the addition of Sandy Master has taken the expectations to the next level. Overall, fans are confident that this film will be a fun-filled, lively entertainer.









