full screen background image

நவீன கால தம்பதிகளைப் பற்றிப் பேச வரும் ‘மதர்’ திரைப்படம்!

நவீன கால தம்பதிகளைப் பற்றிப் பேச வரும் ‘மதர்’ திரைப்படம்!

ரிசார் எண்டர்பிரைசஸ் (RESAR Enterprises) வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ’மதர்’.

குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான கமர்ஷியல் படமாக,  இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ். 

இப்படத்தில் சரீஷ் நாயகனாக நடிக்க, அர்திகா நாயகியாக நடித்துள்ளார். நடிகர் தம்பி ராமையா இதுவரை ஏற்றிராத புதுமையான பாத்திரத்தில்,  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். 

எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார்.  பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா,  இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார். 

வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.தேவராஜ் இசையமைத்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, கே.யு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார். விஜய் ஜாக்குவார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மக்கள் தொடர்பு பணியை மணி மதன் கவனிக்கிறார்.

இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி  உறவு சிக்கலானதாக மாறியுள்ளது. ஒரு சிறு சந்தேகம், ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச் சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

 

Our Score