full screen background image

சென்னை மாநகரம் பற்றிய குறும் படம் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’

சென்னை மாநகரம் பற்றிய குறும் படம் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 அன்று ‘மெட்ராஸ் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், ரமேஷ் யாந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ டாக்குமெண்ட்ரி குறும் படத்தை தமிழில் ‘வெப்பன்’ என்ற படத்தைத் தயாரித்த  ‘மில்லியன் ஸ்டுடியோ’ தயாரித்துள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

2 நிமிடங்கள் 26 நொடிகள் நீளம் கொண்ட இந்த டாக்குமெண்ட்ரியில் பழைய மெட்ராஸின் அழகியலை செயற்கை தொழில் நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளாகவும், உலகம் முழுவதும் போற்றப்படும் பல ஆளுமைகள் மெட்ராஸில் பிறந்தவர்கள் என்ற வலுவான கூற்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ரமேஷ் யாந்த்ரா கூறியதாவது, “மெட்ராஸ் வெறும் நகரம் மட்டுமல்ல! நம் அடையாளத்தையும் கனவுகளையும் இணைக்கும் இடம். காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெட்ராஸை இந்தப் படம் கொண்டாடும்” என்கிறார்.

Our Score